பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்காலத்தில் உலக சோஷலிச அமைப்பின் சக்திகள் பெரிதும் வளர்ச்சிபெற்று வருகின்றன. ஆனுல் முதலாளித்துவ அமைப்பின் சக்திகள் சக்தி குன்றி வருகின்றன. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமும், அடிமை நாட்டு மக்களின் தேச விடுதலைப் போராட்டமும் உச்ச நிலையை எட்டி வருகின்றன. இந்நிலைமைகளில் சில நாடு களில் பாட்டாளி வர்க்கம் உள்நாட்டுப் போர் நடைபெருமலே அமைதியான வழிகளில் அதிகாரத் தைக் கைப்பற்றுவது சாத்தியமாகலாம். ஒவ்வொரு தனிபட்ட நாட்டின் விஷயத்திலும் அந் நாட்டின் பாட்டாளி வர்க்கம் அமைதியான முறையில் அதி காரத்திற்கு வருமா அல்லது ஆயுதம் தாங்கிய உள் நாட்டுப் போரின்மூலம் ஆட்சிக்கு வருமா என்பது அந்தந்த நாட்டின் சமுதாய நிலைமைகளையும் வர்க் கச் சேர்க்கை நிலைமைகளையும் இ ைவ யாவு ம் சேர்ந்த புரட்சிக்கான பக்குவ நிலைமையினையும் பொறுத்திருக்கிறது. இனி, இவ்வாறு வெற்றி பெறும் புரட்சிகர ஜனநாயகத சத்திகளும் பாட்டாளி வர்க்கமும் தாங்கள் வெற்றி பெறும் முன்பு இருந்த அரசாங்க இயந்திரத்த தங்களுடைய புரட்சிக் குறிக்கோள் శ * + - - 3. களே நிறைவேற்ற பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று காண்டோம். இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகிய மூவரும் வகுத்துள்ள அரசு பற்றிய தத்துவார்த்தக் கொள்கையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 86