பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக கம்யூனிஸ்டு இயக்கம் அறிந்துள்ளது. புதிதாக விடுதலையடைந்த வளர்ச்சியடையாத நாடுகள், ஏகாதிபத்தியச் சார்பு நிலையிலிருந்து விலகி, சோஷ லிஸ்டு அணியோடு நேச உறவு கொண்டால், சுயேச் சையான வளர்ச்சியை அடைய முடியும் என்பதை பல நாடுகளின் அனுபவம் மெய்ப்பித்துள்ளது. இப்பாதையைப் பின்பற்றி சோஷலிஸ்க் குறிக் - அடையும் வாய்ப்பு, விடுதலை பெற்ற நாடு இருக்கிறது. முதலாளித்துவமற்ற பாதையில் ஒரு நாட்டை வழிப்படுத்துவது மார்க்சிச-லெனினிச கட்சிகளாக மட்டுமல்லாமல், சில நாடுகளில் புரட்சிகரமான முதலாளித்துவ ஜனநாயக கட்சிகளாகவும் இருக்க லாம். இந்நாடுகளில் மார்க்சிஸ்டுக் கட்சிகள் இல்லா மல் இருக்கலாம், அல்லது போதுமான செல்வாக்கை பெருமவிருக்கலாம். ஏகாதிபத்திய எதிர்ப்பு-ஜன. தாயகப் போராட்டம் தீவிரமடையும்போது அதற்கு தலைமை தாங்குகிற ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சி வாதிகள் மார்க்சிய - லெனினிய தத்துவத்தைக் கற்றுக்கொண்டு தொழிலாளர் வர்க்கத்தின் நலன் களுக்காக போராடுகிற மார்க்சிய வாதிகள் ஆகின் றனர். இது போன்றுதான் கியூபாவில் ஜனநாயகப் புரட்சி வாதிகள் போராட்டம் தீவிரமடையும் பொழுது வி ஞ் ஞான சோஷலிசப் பாதைக்கு தாமாகவே வந்து விட்டனர். இவ்வாறு பல்வேறு பாதைகளில் ஏகாதிபத்திய இணைப்பிலிருந்து நாடு கள் மீண்டு வருகின்றன. எனவே உலக சோஷலிசப் புரட்சி இயக்கம் பல புரட்சி இயக்கங்களின் கூட்டு இயக்கமாக இருக்கிறது. முக்கியமாக, பாட்டாளி வர்க்க ஏகப்ோக எதிர்ப்புப் போராட்டம், தேசீய விடுதலைப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் ஆகிய மூவகை புரட்சிப் பாதைகன் சோஷலிச இயக்கத்தை நோக்கிச் செல்லுகின்றன. 85