பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரபுத்துவ சக்திகளனைத்தையும் எதிர்த்து உக்கிமாகப் போராடுகின்றன. முதலாளித்துவ நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டு ஜனநாயகத்தையும், முற்போக்குப் பாதையையும் தாக்குகின்றன. சோவியத் எதிர்ப்பு சோஷலிஸ் எதிர்ப்பு பாதையில், அதிர்ச்சியுற்ற மக்களைத் திருப்பிவிட பெரு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. முற்போக்கு சக்திகள் ஒற்றுமைப்படும்பொழுது, பிற்போக்கு சக்திகளும் தங்கள் பலம் அனைத்தையும் திரட்டி, வரலாற்றை பின்னோக்கித் திருப்ப முயலுகின்றன. இவர்களிடையே பாசிஸ சக்திகள் தலை தூக்குகின்றன். மார்க்ஸிஸ அறிவில்லாத போலி மார்க்ளிஸ்டுகளும், எந்தக் கலகமும் புரட்சியென்று நம்பி தங்கள் குரலையும், கலகக் கூச்சலோடு சேர்த்து ஒலிக்கின்றனர்.


முற்போக்கு சக்திகளும், பிற்போக்கு சக்திகளும், புரட்சிப் போராட்டக்களத்தில், மகாபாரதப் போரில் பாண்டவர்களும் கெளரவர்களும் நின்றது போல் நிற்கிறார்கள்.

இப்போராட்டம் இருவகையான பாதைகளுக்கான போராட்டம். அவை முதலாளித்துவப் பாதை, முதலாளித்துவமற்ற பாதை எனபனவாகும. நமது நாடு முதலாளித்துவப் பாதையில் சென்றுவருகிறது. மக்கள் இயக்கங்களால் இப்பாதையை மாற்ற தொழிலாளி வர்க்கமும் கம்யூனிஸ்டுக் கட்சியும் போராடுகின்றன. பழைய பாதையில் தங்குதடையின்றிச் செல்ல வேண்டும் என்பதற்காக பிற்போக்கு சக்திகள் போராடுகின்றன.


கடந்த பதினைந்து ஆண்டு அனுபவத்தில் விடுதலை பெற்ற நாடுகள், முதலாளித்துவமற்ற பாதையில் சென்றால், சோஷலிசத்துக்குரிய பொருளாதார அடிப் படைகளை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை


84