பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 43

அதாவது பிச்சை ரொட்டிகள் வேறு என்ன உணவுகளைப் பிச்சைக்காரர்களுக்கு மக்கள் போடுகிறார்களோ, அந்த பிச்சைகளை எல்லாம் வாங்கிவர வேண்டும்;

இவ்வாறு நமது நாட்டுக் குசேலர்களைப் டே ல; வீட்டுக்கு வீடு பிச்சை என்ற கப்பத்தை வசூல் செய்து கொண்டு வந்தபின்பு, தெருத்தெருவாக அலைந்த களைப் பால் களைத்துப் போய் திரும்பும் மார்ட்டின் லூதர், இனி மேலாவது சிறிது அறிவுப் பிச்சை பெறலாமே என்று சன் மார்க்க: புத்தகங்களைப் படிக்கலாம் என்று புத்தகத் தோடு உட்காருவார்

அவ்வளவுதான்் அடுத்த சந்தியாசி அதைப் பார்த்து விட்டு, "இப்படி புத்தகம் படிக்கும் சாமியாரால் இந்த மடத்திற்கு கொஞ்சமும் நன்மை ஏற்படாது. வீடு வீடாய் எவ்வளவு தூரம் அலைந்து திரிந்து அதிகமாகப் பிச்சை வாங்கி வருகிறானோ, அந்த சாமியாால்தான்் இந்த tடத்திற்கு அதிகமான நன்மை ஏற்படும்' என்று எச்சரித் துக் கண்டித்துப் பேசுவார்.

மடத்தில் இப்படிப்பட்டக் கடுமையான சட்டதிட்டங் களாலும், தன்னல வெறுப்பு நெறிகளாலும் பாபவிமோ சனம் கிடைக்கும் என்று லூதர் ஏற்கனவே அறிந்து தான்் இந்த மடத்திலே சாமியாராகச் சேர்ந்தார். அதனால், இந்த கண்டிப்புக்களை அவர் ஒரு பொருட்டாகக் கருதாமல் பேரின்பப் பேறு பெறவேண்டுமென்ற ஆசையால் எல்லா வற்றையும் மனமாரச் சகித்துக் கொண்டே மட ஊழிய மாற்றினார்.

ஆனாலும், தனது அறிவு வளர்ச்சிக்கான நூல்களைப் படிப்பதை மட்டும் நிறுத்துவதில்லை; அடிக்கடி ஜெபம் செய்வதில் இருந்தும் தவறுவது இல்லை. உறக்கத்தைக் கெடுத்துக் கொண்டாகிலும் இந்த இரு பணிகளையும் செய்யாமல் அவர் உறங்க்மாட்டார்; உண்ணடிாட்டிார்;