பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 67

இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரைத தமது உயிருக் குயிராகக் கொண்டார்.

எனவே, லுத்தரது வாழ்வு மலர்ந்தது: மாபெரும் மகத்தான் திருப்பமும் ஏற்பட்டது; திருச்சபை போக்கிற்கே ஒரு புரட்சிகரமான திருப்பத்தைக் கொண்டு வருவதற்குக் கர்த்தர் அதனைப் பயன்படுத்தினார். -

திருச்சபை மலர்ச்சியுற்றது; புத்துயிர் பெற்றது; சடங் காச்சாரத்தில் மூழ்கி மடிந்து கிடந்த திருச்சபைக்கு உயிர் மீட்சி வந்தது

ரோம்ர் நிருபத்தைத் தியாணிக்கையில் கடவுள் கிருபையாகத் தனக்கு வெளிப்படுத்தச் சித்தங்கொண்ட இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தின் அருமை பெருமைகள்ைப் பற்றி; மார்ட்டின் லுத்தர் தான்் எழுதிய ரோமர் நிருப வியாக்கியான முன்னுரையில் விவரமாகக் காட்டியுள்ளார்.

இந்தவிசுவாச விளக்கவுரையை வாசித்த எத்தனையோ மக்கள் கிறிஸ்துவுக்குள் விசுவாசிகள் ஆகியுள்ளார்கள். ஆவர்களுள் ஜான்வெஸ்வியும் ஒருவர்.

மார்ட்டின் லூதரது கிறிஸ்துவைப் பற்றும் விசுவாச மார்க்கத்தால், அந்தக் காலத்து ரோமச் சபையில் அநேக புர்ட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டு, புத்து பீர் பெற்று பல புதுச்சபைகள் ஆரம்பமாயின.

ஆக்காலத்து ரோமச்சபை கிறிஸ்தவர்கள் இரட்சண்ணி யத்தைச் சம்பாதிப்பதற்குத் தங்கள் வாழ்நாள் எல்லாம் புண்ணியக் கிரிகைகளைச் செய்தும், இரட்சிப்பின் நிச்சயத் தைப் பெற்றுக் கோள்ளாது தவித்தாரிகள்.

மார்ட்டின. லூதர் பார்த்துப் பரவசப்பட்ட கிறிஸ்து வின் மீதுள்ள விசுவாச நெறி; அவர்களுக்கு ஒரு புத்து பிரை யும், புது நம்பிக்கையையும், புது வாழ்வையும் அளித்தது