பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அர்ட்டின் லூதரின்

கிடந்ததும் போன்ற நிலைகளிலே லூதர் இங்கு முன்பு இருந்தார்.

இப்போது பல மடங்களுக்கு மேல் விசாரணை அதி காரியாகவும், மத குருவாகவும், தத்துவ் போதகராகவும், மத சம்பந்தப்பட்ட இறையியல் பட்டதாரியாகவும், பெரும் தத்துடிப் பேச்சாளராகவும், ரோமாபுரி சென்று மீண்ட ஒரு புனித யாத்ரீகராகவும் இந்த கடத்தைப் பார்க்க வத் துள்ளார் என்பதை மடத்துச் சாமியார்கள் எல்லாம் புரிந்துகொண்டு டக்க ஒடுக்கத்தோடு மார்ட்டினின் முன்பு வந்து நின்றார்கள்.

இப்போது மார்ட்டின் லூதர் உலகத்துக்கு ஒரு தத் செய்தியைக் கூறவே இம் மடத்துக்கு வந்துள்ளார். அந்த நற்செய்தி என்ன? "உலகுக்கு நற்செய்தியானவர் கரீத்த ராகிய இயேசு கிறிஸ்துவே" என்ற செய்தியை உலகுக்குப் பறைசாற்றி அறிவித்தார்.

கிறிஸ்துவின் மீதுள்ள விகவாசத்தின் மேன்மையை அந்த மடத்துச் சாமியார்களுக்கும் ஜெபக் கூட்டத்தில் திரன்டிருந்த மக்களுக்கும் எடுத்துரைக்கும்போது, 'விக வாசத்தினாலே நீதிமான் பின்ழப்பான்" என்ற தெய்வ வாக்கின் பெருமைகளை விவசித்து எடுத்துரைத்தார்.

தனது அதிகாரத்துக்கு உட்பட்ட அகஸ்தீன் நெறி மடங்களை எல்லாம் ஆறுவார காலமாகச் சுற்றிப் பாத்த பின்பு, அந்த சாமியார்களுக்கும் கிறித்துவைப் பற்றும் விக வாசத்தை எடுத்துரைத்தார். பல சாமியார்கள் லூதரது ஞானத்தைக் கேட்டு மனந் திரும்பினார்கள்.

விசுவாசத்தால் கிறிஸ்துவை தங்களது சொந்த ரட்சக ராக ஏற்றுக்கொண்டார்கள் மடத்துத் துறவிகள். இந்த நற்செய்தியை பிறருக்கும் பறைசாற்றினார்கள். இதன் வாயிலாக இக்காலம் சீர்திருத்த விடிவெள்ளிக் காலமாகவே மக்களுக்கும் பிற கல்வியாளர்களுக்கும் தோன்றியது.