பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 79

களுக்கோ, மிரட்டல் உருட்டல்களுக்கோ எள் மூக்களவும் இடம் கொடுக்க மறுத்து விட்டார். -

அது மட்டுமன்று நான் விடுத்த அறிக்கை சத்தியம் சத்தியமே! நான் கூறியது சத்தியத்திற்கு விரோதமானது என்று சத்திய வேதாகமத்தைக் கொண்டு நிரூபித்துச் காட்ட முடியுமா? என்று கடல் கொந்தளிப்புத் தொனி யிலே எழுந்து நின்று குரல் கொடுத்தார்.

உர்பன் உடனே உரிரென்று கோபம் கொண்டு, "எல் லோராலும் கைவிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டகல் உன் கதி என்ன தெரியுமா? உனக்கு அடைக்கலம் தருயவர் யார்? அதைப் பார்க்கிறேன்" என்று அவன் கோபமாய் கொக்கரித்தான்். -

உடனே மார்ட்டின் லூதர் அவன் எதிரிலேயே, வின் துலகைச் சுட்டிக காட்டி, விண்ணுலகக் கர்த்தரி எனது அடைக்கலமும், கோட்டையுமானவரி, என்றார்.

இதைக் கேட்ட உர்பன், மார்ட்டின் லூதர் இருத்த இடத்தை விட்டு சட்டென போனான்: மார்ட்டின் லூதருக்கு இரசனிடமிருந்து உயிர்க்காப்பு உறுதிச் சீட்டு வந்தது லூதர், லிங் என்ற பண்டிதருடன் சயத்தான்ிடம் சென்றார்.

எதிரியை எதிரி சந்திக்கும் போது, முறைப்படி ஒருவரை ஒகவரி வாழ்த்திக்கொள்ளும் மனிதநேய வழக்கப்படி வாழ்த்திக் கொண்டார்கள். பின்னர், நெடுநேரம் வரைக் கயத்தான்் லூதரோடு ஏதும் பேசாமல் ஊமையாக இருந் தான்். அதனால், மார்ட்டின் தான்ாகவே கயத்தான்ிடம் பேசலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

"நான் எழுதி வெளியிட்டுள்ள நியாய அறிக்கை சம் பந்தமாகப் போப்பானவரின் தீர்ப்பை அறிய வந்திருக் கிறேன்" என்று மார்ட்டின் லூதர் எழுந்து கேட்டார்.