பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ மா ரீட்டின் லூதரின்

அந்த ஆக்ஸ்பரிக் விசுவாச அறிக்கை, சத்திய வேதாக மத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த தால், அந்த அறிக்கை உலகப் புகழ் பெற்றுவிட்டது.

இதனைக்கண்ட ரோம் நகர் போப் சபையினர் என்ன செல்வது என்று புரியாமல், எப்படியாவது மாரிட்டின் லூதரைக் கொன்று விடுவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

அந்த நேரத்தில் துருக்கி நாட்டுக்கும், பிரான்ஸ் நாட்டுக்கும் போர் ஆரம்பமாகும் நெருக்கடி இருந்ததால், லூதரின் சுவிசேஷ கிறித்துவ இயக்கத்தை வேரறுக்க அவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மன்னன் ஐந்தாம் சார்லகம் லூதர் விஷயத்தில் அவ்வளவாக ஆக்கரை காட்டாமல் அலட்சியப்படுத்தி விட்டான்.

மார்ட்டின் உயிரோடு வாழ்ந்தவரையில் அந்தப் போர் மூளவில்லை. இதனால் லூதரின் கவிசேஷ திருச்சயைக்கு ஏற்பட இருந்த பேரபாயம் நேராமலேயே போய்விட்டது.

"இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசமே உலகத்தை வெல்கின்ற ஜெயம் என்பது மார்ட்டின் லூதரின் தொன் டினால் உண்மையானது; உறுதியானது!

12. மார்ட்டின் லூதரின் மணம் மரணம்!

மார்ட்டின் லூதர், இடைவிடாத விசுவாசத்தால் தனது சொந்த ரட்சகரான இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பின்பு அவருக்கு உலகம் போற்றும் பேரும் புகழும் கிட்டியது. எனவே, கிறித்துவப் பாதிரியாராக ஒருவர் மாறினால் கூடி அவருக்கு ரட்சிப்பு கிடைக்காது. சத்திய