பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

13



கண்ணீர்

தக் கோட்டையின் கலைவாயில் வரையிலும் திரும்பாமல் பின்பக்கமாகவே நகர்ந்து வரும் வழக்கத்துக்கு மாறாகச் சரேலென்று திரும்பி வரும் இவனைக் கண்ட போப்பின் கையாட்கள் கொல்லென சிரித்தார்கள். கண்ணீர் வேதனைப்பட்டு வெளியேறுகிறது. இந்தக் கண்ணீர் வேதனை மட்டிலுமல்ல, வெட்கமும்பட்டது என்று அந்தப் பன்னீருக்குத் தெரியவில்லை.

கண்ணீரில் வெப்பம் இருக்கிறது என்று அந்தப் பன்னீருக்கு எப்படித் தெரியும். மனம் கசியும் போதெல்லாம் கண்ணீர் வரும். ஆனால் பன்னீர், செம்பில் உள்ளவரையிலும்தான் வரும் என்று, அந்த வயோதிகப் போர்வையில் வனிதைகளின் பாவங்களைப் போக்குவதாகச் சொல்லும் போப்பின் வெண்சாமரம் வீசிகளுக்கு எப்படித் தெரியமுடியும்.

தோற்றத்தில் மயங்குபவர்கள் எப்போதும் உலகின் எந்தக் கோடியிலும் இருக்கத்தான் செய்தார்கள். கண்ணீர், பல கமண்டல வாதிகளின் முக மூடியைக் கிழித்திருக்கிறது என்பதை இந்தக் கண்மூடிகள் அறிந்துகொள்ள முடியாது. பாஸ்டில் சிறையைத் தகர்த்தெறிந்தது, சார்லசைத் தூக்கிலேற்றியது, பல மதோன்மத்தர்களை வனவாசஞ் செய்ய வைத்தது, ஜாரைக் கொன்றது, சட்டங்களை மாற்றி எழுதியது, நாட்டின் எல்லைக்கோடு