பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

மார்டின் லூதர்

22


ணத்தை மாற்றிக்கொள்வதாயில்லை என்பதைக் கண்டிப்பாகத் தெரிவித்து விடு." எவன், தான் எண்ணியதை வெளியே சொல்லப்பயப்படுகிறானோ அவன் கோழை.

படிப்பினை

னால் இந்த ரோஜாவின் மூலம் இரண்டு உண்மைகளை யுணர்த்துகிறார் போப்.

ஒன்று, இந்த ரோஜாவை நீ வாங்குவாயானால் உன் கொள்கையைத் தங்கத்துக்கு விற்கிறாய் என்பது.

மற்றொன்று, இந்த ரோஜாவைப் போன்ற உண்மை மலரின் வாசத்தை உலகுக்குக் கொடுக்க நினைத்துப் பறிக்க முற்பட்டால் அதனடியிலே முட்கள் நிரம்பியிருக்கும். பத்திரம் என்று எச்சரிக்கை செய்கிறார், கொண்டு போ மனிதன் சிந்தனை யந்திரம், மாயாவாதியல்ல. களங்கமில்லாத உள்ளத்தினருக்குக் காஷாயம் வேண்டியதில்லை. சீக்கிரம் சந்திக்கின்றேன் என்று சொல்.

போப் தன்னைப் பார்த்து தலையசைத்தால் தரித்திரமே ஒழிந்துவிட்டதென்று நினைக்கும் காலம். அவர் காலடி மண் கிடைக்கால் அதுவே கர்மம் ஒழிக்கும் மருந்தென நினைக்கும் காலம். கமண்டல நீர் பட்டால் பரமண்டலத்தில் தனக்குத் தனியாக ஓர் இடம் ஒதுக்கப்படும் என்று நினைத்துக்கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில்தான்