பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

27


விடுவேன் என்று பயமுறுத்திய அரசன் இன்று, "உன் உயிருக்கு ஆபத்து ஒன்றும் வராமல் நான் பார்த்துக்கொள்ளுகிறேன்." என்ற உத்திரவாகத்தோடு அழைக்கிறான். (Pope Leo X) பத்தாம் போப் லியோவும் இதை ஒப்புக்கொண்டான்.

லூதர் தனியாகவே பார்லிமெண்டுக்குச் செல்லத் தீர்மானித்துவிட்டான். ஆனால் அதற்குள் வேறோர் நண்பன் வேர்த்த முகத்தோடு ஓடோடி வந்து நிற்கிறான். அவனும் தன்னைத் தடுக்க வருகிறானென்று நினைத்து வேகமாக நடக்கிறான் லூதர். மார்டின், நில்! நில்; ஒரு மரணச் செய்தி, எனலும், திடுக்கிட்டுத் திரும்பினான்.

துக்கச் செய்தி

மது நண்பன் ஹெஸ் எதிரிகளால் எரிக்கப்பட்டான். இந்தத் துக்கச் செய்தியைக் கேட்ட லூதர் கொஞ்சமும் மனங்கலங்காது சொல்லுகின்றான், "ஹெஸ் எரிக்கப்பட்டான், ஆனால் அவனிடமிருந்த உண்மைகளையல்ல. "Hess was burnt but not the truth with him,” என்று ஒரு சாதாரண சிரிப்பு சிரித்துவிட்டு வழிமேல் விழி வைத்து நடந்தான்.

பார்லிமெண்டில் வாதாடத் தனியாகவே செல்கின்றான் லூதர் மதத்தை ஒப்புக்கொண்டு, அதில் மறுமலர்ச்சி வேண்டுமென்ற மதப் பேராசிரியன் மார்டின் லூதர் தன் மனச்சாட்சியை மட்டிலும்