பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

மார்ட்டின் லூதர்


வரும் காலடி சத்தமும் கேட்கவில்லை. காரணம், கீழே விரித்திருப்பது ரத்தனக் கம்பளம். உள்ளே சென்ற லூதர் தான் ஒரு கெளரவக்குடி என்ற காரணத்துக்காக அரசாங்க முறைப்படி அரசனை மட்டிலும் வணங்கி நின்றான். வலப்பக்கம் வீற்றிருக்கும் வயோதிக (வல்லூறை)ப் போப்பை தன் கடைக் கண்ணாலும் பார்க்கவே இல்லை.

இது போப்புக்கு விடுத்த முதல் எச்சரிக்கை. சகிக்கமுடியாத அவமானம். இதை யாராவது கவனித்துவிட்டார்களா என்று இருபக்கமும் கடைக்கண்ணால் பார்க்கின்றார் போப். யாராவது கவனித்திருந்தால் என்ன செய்வது என்ற அச்சம் அவர் உச்சியைப் பிடித்தாட்டியது. சமாளித்து ஓர் தந்திரத்தைச் செய்ய எண்ணினார். அதுதான்! லூதர் தன்னையும் வணங்கியதைப் போலவும், தானும் அவனுக்கு ஆசீர்வாதம் செய்ததைப் போலவும், தானே வலிய கையை உயர்த்திவிட்டார். இந்தக் கோமாளித்தனம் வெளியே எங்கேயாவது நடந்திருந்தால் மண்டபமே கொல்லென்று சிரித்திருக்கும். ஆனால், தன் அடிகளையே அளந்து போடவேண்டிய அரசன் தர்பாரல்லவா. அவரவர்கள் வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்டனர்.

வாதம்

கேள்வி :- உன் கருத்துக்கள் சரி என்று நீ நம்புகிறாயா?

பதில் :- ஆம்.