பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.நன்றி

ராஜன் அண்ட் கோ, உரிமையாளரும் நமது நீண்ட நாளைய நண்பருமான திரு. ரங்கராசு அவர்கள் இந்த, என், எழுத்துக்களை வெளியிட விரும்பியபடி, நான் விரும்பித்தந்த இதை, நீங்கள் எல்லாரும் விரும்பும்படி வெளியிட முன்வந்ததற்காக நன்றி.

எனது ஊக்கம், அவரது செயல் வேகம் எல்லாம் உங்கள் பேராதரவென்ற பெட்டகத்தில் அடங்கி இருக்கும் அன்பு.

வரலாற்று வாயிலாகவே பலவற்றை வெளியிட வேண்டுமென்று சிலவற்றை எழுதிக் கொண்டிருக்கும் என் நோக்கம் சரி என்று சொல்லும் உங்கள் உயர்ந்த எண்ணத்தில் அடிக்கும் மணியோசையில் இது முதல் மணி. நமது வாழ்வெனும் ஒரு நாளைக் கடக்க இன்னும் 23 மணியோசைக் கேட்கலாம். தொடர்ந்து வரும் மணியோசையில் யார் யாருடைய வாழ்க்கைச் சுருக்கங்கள் கேட்கும் என்பதை வெளியிடுவோர் வெளியிடுவார்.

உங்கள் புன்சிரிப்பே எனது எழுத்துப் பணி. வணக்கம்.

உங்கள்
சி. பி. சிற்றரசு