பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2

உலகம் போற்றும் என்று யூகிக்கமுடியாத பருவம்.

தான் கண்ட உண்மையைத், தண்டனைக்குப் பயந்து மறைத்துவைத்து, தானே மனம் புழுங்கிச் சாகாமல், தக்க நேரத்தில் தரணியெல்லாம் அறியச்செய்த தன்னுணர்வாளன் என்பதை தார்வேந்தனும், போப்பும் கனவிலும் கண்டறிந்திருக்க மாட்டார்கள்.

அந்த உருவுடையோனைப் பற்றியே இங்கு நாம் ஆராய்கிறோம். அவன் ஒப்பற்ற வீரன். அழகுக்காக சிலவற்றை, குணத்துக்காக சிலவற்றை, தன்மைக்காக சிலவற்றை, தோற்றத்திற்காக சிலவற்றை, தேவைக்காக சிலவற்றை, பெருமைக்காக சிலவற்றை நாம் அணுகுவகைப்போல, இவரை நாம் அறிவால் அணுகுகின்றோம். அஞ்சாமைக்காக நெருங்குகின்றோம். வாதத்துக்காக வாழ்த்துகிறோம். வீரத்துக்காக் போற்றுகிறோம். அந்தமாவீரன் மார்டின் லூதரைப் பற்றியே இங்கே குறிப்பிடுகிறோம்.