பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலை பூண்ட மலர்

அம்பிகையை மனம் உருகிப் போற்றி செய்த அபிராமி Hட்டர் அப்பெருமாட்டியின் திருவருள் அநுபவத்தைப் பெற்றவர். தம்முடைய விண்ணப்பங்களை அன்னை ஏற்றுக் கொண்டாள் என்ற உறுதிப்பாடு அவருக்கு உண்டாயிற்று. தம்முடைய புகழ் மொழிகள் அபிராமி யம்மையின் திருவடி களுக்கு உகந்த மலர்கள் ஆயின என்ற நம்பிக்கை அவரிடம் தோன்றியது. அவர் தம்முடைய விருப்பம் காரணமாக அவ்வாறு எண்ணிக்கொண்டார் என்று சொல்லலாமா? மற்றவர் திறத்தில் ஒருகால் அப்படிச் சொல்லலாம். அபிராமிபட்டரோ அநுபூதிமான்; அம்பிகை யின் திருவுருவத்தைத் தரிசித்தவர். அந்த அநுபவ மிடுக்கினல் அவர் தம் பாமர்லே அம்பிகையின் சரணுரவிந் தங்களில் ஏறியது என்று சொல்கிருர். அவர் உணர்ந்த உண்மை அது. தம் பாமாலை பூண்ட மலராக இறைவியின் திருவடியைப் பார்க்கிரு.ர். -

அருளது.புவத்தில் ஆழ்ந்தவர்களுக்கு இப்படி ஓர் உணர்ச்சி உண்டாவது இயற்கை. முருகப்பெருமானுடைய திருவருளில் ஊறி அநுபூதி கைவரப்பெற்ற அருணகிரி நாதர்,

மல்லே புரிபன் னிருவா குவில்என் - சொல்லே புனையும் சுடர்வே லவனே'

என்று பாடுகிருர். முருகன் செய்த பேரருள் வல்ல பத்தால்

இந்த உணர்ச்சி அவருக்கு உண்டாயிற்று. அதே நிலையில் இருப்பவர் அபிராமிபட்டர். - -