பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 18 மால்ை பூண்ட மலர்

பேணுதற்கு எண்ணிய எம்பெரு

மாட்டியைப் பேதைநெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத .. கண்ணியைக் காணும்.அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன் ருேமுன்செய் புண்ணியமே?

(ஒளி பொருந்திய நெற்றியில் ஞானத் திருவிழியுடை

யவளை, தேவ்ர்கள் எல்லோரும் தேடிவந்து பணிந்து விரும்பி வழிபடுவதற்கு எண்ணிய எம்முடைய தலைவியை, அறியாமையையுடைய மனத்தில் கர்ணுவதற்கு நெருங்கி யவள் அல்லாத கன்னியை, தரிசிக்கும் அன்பு அடை வத்ற்கு எண்ணிய எண்ணம், முற்பிறவியில் நாம் செய்த புண்ணியச் செயலின் பயனன்முே?

வாள் - ஒளி, பேணுதல் - விரும்பி வழிபடுதல். பேதை யாகிய நெஞ்சில் என்றும் கூறலாம். புண்ணியம் : காரியத் தைக் காரணமாக உபசரித்தது. .

முன் செய்த புண்ணியம் இருந்தால்தான் இறைவியின் பால் பக்தி உண்டாகும் என்பது கருத்து.

அபிராமி அந்தாதியில் 40 ஆவது பாடல் இது.