பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 மாலை பூண்ட மலர்'

அவளுக்குத் துணையாக வரும் கணவராகவும் வடிவெடுத்து வருகிறது. அவன் மனதில் தியானப்பொருளாக எழுந்தருளு கிறது. அப்போது அன்னையின் கண்ணில் அருள் கொப்புளிக் கிறது. அப்போதுதான் அலர்ந்த நீலோற்பல மலரைப்போல அது விளங்குகிறது. அன்னையின் அருகில் உள்ள அப்பன் செம்மை நிறத்தோடு கண்ணக் கவரும் அழகளுக எழுந் தருளுகிருன். இவ்வாறெல்லாம் கோலம் பூண்டு வருவது, அன்பர்கள் தியானம் செய்வதற்குரிய வடிவு கொள்ளவேண் டும் என்பதற்காக. அடியார்களுக்காக, அவர்கள் காரண மாகவே, அவர்கள் மயாமயமான இந்தப் பிரபஞ்சத்தில் இறங்கி மனதில் புகுகிருர்கள். . . .

புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும்

கூடி நம் காரணத்தால் கண்ணி இங்கே வந்து.

இவ்வாறு வந்தவர்கள் தம் அன்பன் தலைமேல் தம் பத்ம பாதத்தைப் பதித்து இன்பம் தர விரும்புகிருர்கள்; ஆனந்த, அநுபூதியை வழங்கத் திருவுள்ளம் கொள்கிருர்கள். ஆனல் அதற்கு ஏற்ற பக்குவம் அவனுக்கு வேண்டுமே! அதற்காக அந்த நிலையைப் பாதுகாக்க வேண்டுமே! அதற்காக அவனை ஒரு கோட்டைக்குள் கொண்டுபோய் வைத்துப் பிறகு அந்தச் சிறப்பைத் தந்தால் பறிபோகாமல் காக்க முடியும்.

இதனை எண்ணி அடியார்களின் கூட்டமாகிய கோட் டைக்கு நடுவே அன்பன இருக்கும்படி பண்ணுகிருர்களாம். அதாவது சத்சங்கமே இறைவியின் திருவருளால்தான் ஏற் படுகிறதாம். ஒரு பொருளை ஒருவருக்கு வழங்குபவர்கள், அதை வாங்கிக்கொள்கிறவர் நன்ருக அநுபவிக்கத்தக்க வகையையெல்லாம் செய்வது சிறப்பு.