பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மாலை பூண்ட மலர்

மாட்டியின் திருக்கரத்தில் கரும்பு வில்லும் பஞ்ச பாணமும் இருத்தல், மன்மதனுக்கு ஆயுதங்களாகிய அவற்ருல் காம மோகிதர்களாக உள்ள மனிதர்கள் அந்தக் காம வலை யினின்றும் விடுபடச் செய்யும் ஆற்றல் அம்பிகையிடம் உள்ளதைக் காட்டுகிறது. எனவே பாசம் முதலிய நான்கும் தேவி தன் திருவருளால் அகங்காரத்தையும், காமத்தையும் தன்னே அண்டும் அடியார்களிடமிருந்து போக்குவாள் என்பதைக் குறிக்கும் அடையாளங்கள் என்று சொல்வதில் தவறு இல்லை. -

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்ச பாணி.

தேவியின் புகழைப் பேசும் வேதத்தையும் உபநிட தத்தையும் தெரிந்துகொண்டவர்கள் அவற்றின் வாயிலாக அப்பெருமாட்டியின் திருவடியைப் பற்றிக்கொள்கிருர்கள். அந்தத் திருவடியை உள்ளத்தில் வைத்துத் தியானம் செய்யும்போது அன்னை தன்னுடைய திருமேனி லாவண் யத்தை அவர்களுக்குக் காட்டுகிருள். அப்போது அவர்கள் உள்ளத்தில் உள்ள அகந்தையும், காமமும் ஒழிகின்றன. இந்த வகையில் முதலில் திருவடி தரிசனம் செய்து, பின்பு திருக்கரங்களையும் அதில் உள்ள ஆயுதங்களையும் அடியார் கள் தரிசிக்கிருர்கள். பல காலம் மாயைக்குள் அகப்பட்டு, பிரபஞ்ச வாசனையில் ஈடுபட்டு, மூன்று வகையான தாபங் களைப் பெற்று. அல்லற்பட்ட ஆருயிர்களுக்கு இந்தத் துாய தியானத்தினல் ஒரு வகையில் அமைதி கிடைக்கிறது. அன்னையின் திருவுருவத்தைக் கண்டவுடன் பேரார்வம் பொங்கி வந்தாலும் இதுகாறும் பட்ட தொல்லையில்ை இனியும் அது தொட்ர்ந்து இருக்குமோ என்ற அச்சம் உள்ளே இருக்கிறது. பசித்த குழந்தை தன் தாயைக் கண்டவுடன் ஒருவாறு பசியை மறந்திருந்தாலும் அந்தப் பசி போவதில்லை. தாய் குழந்தையை எடுத்து அணைத்துப் பால் கொடுத்த பிறகே அது போகிறது. அதுபோல் எம்பெரு