பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாவரினும் மேலானவள்

சிவபெருமானுடைய வாம பாகத்தில் இருந்தவள் என்று அம்பிகையைத் துதித்த அபிராமிபட்டர் அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவை எண்ணிப் பார்க்கிரு.ர். அந்த உறவு மிகவும் விசித்திரமானது. ஒரு சமயம் அவனே அடைய அவள் தவம் செய்கிருள். மற்ருெரு சமயம் அவளை அடைய அவன் தவம் செய்கிருன். அவனுடைய திருமேனி யில் சரிபாதியை ஆக்கிரமித்துக்கொண்டு முழு உரிமை யோடு சமானமாக எழுந்தருளியிருக்கிருள். வேறு சமயத் தில் அவளே தலைவியாக இருக்க அவன் அவளுக்கு அடியவகை இருக்கிருன்; வணங்குகிருன். சில சமயங்களில் அவனுக்கு அடங்கிய நாயகியாக, பணிந்தொழுகும் பத்தினி யாக, அவள் விளங்குகிருள். இவ்வாறெல்லாம் நாடகம் நடித்தாலும் அவர்கள் இருவரும் ஒருவரே. சிவன் வேறு சக்தி வேறு அல்லர். -

இந்த விசித்திரமான உறவை நினைத்து வேறு ஒரு வகையில் அதனைச் சொல்கிருர், -

இந்த ஆசிரியர் அம்பிகையைத் தம்முடைய உள்ள மாகிய சிங்காதனத்தில் இருத்திக்கொண்டவர். தமக்கு நெருங்கிய துணையாகப் பெற்றவர். வேதம்கூட அவன் என்றும் அவள் என்றும் அது என்றும் சேய்மைச் சுட்டாகக் கடவுளைச் சொல்கிறது. பக்தர்களேர் இறைவனுடன் நெருங்கி அருளநுபவத்தில் இணைந்தவர்களாதலின் அணிமைச் சுட்டினல் இவன் என்று சொல்வார்கள். திருஞானசம்பந்தர், - -

பீடுடைய பிர்மாபுரம் மேவிய பெம்மான்

இவன் அன்றே