பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாவரினும் மேலான வள் 143

என்று பாடுகிருர். அபிராமி பட்டரும் உள்ளத்திளுல் அம்பிகையின் அணுக்கத் தொண்டராகும் பேறு பெற்றமை யால் அன்னையை அணிமைச் சுட்டினுள் இவள் என்கிரு.ர். ‘என்னுடைய உள்ளத்திற்கு அணிமையில் எழுந்தருளி என் தியானப் பொருளாக நின்றருளும் பிராட்டி' என்று பொருள் கொள்ளவேண்டும். என்னுடைய தாயாகிய இவள் இப்படியெல்லாம் எம்பிரானுடன் இணைந்த உறவுடை யவள் என்று சொல்ல வருகிருர்,

"இந்தப் பிராட்டி உமாதேவியாகத் தனியே பிரிந்: திருந்து பரமேசுவரனை அடைய வேண்டுமென்று இமாசலத் தில் தவம் இருந்தவள்’ என்று தொடங்குகிருர், விரிவாகச் சொல்லாமல் சுருக்கமாகத் தவம் செய்தவள் என்கிரு.ர்.

தவளே இவள்.

- 'மாத்தவளே என்று 13-ஆம் பாடலிலும் சொன்னர். தனியே இமவான் மகளாகப் பிறந்து சிவபெருமானை அடைய வேண்டும் என்ற பேரார்வத்தினுல் அதன் பொருட்டு மகா யோகினியாகிப் பொறி புலன்களை அடக் கித் தவம் செய்தாள். அதன் பயனுகப் பரமேசுவரனை மனந்தாள். அவனுடைய மனைக்கு மங்கலமாக, அவனு டைய வாழ்க்கைக்கு உறுதுணையாக ஆளுள், எல்லாருக்கும் இன்பத்தை உண்டாக்கும் சிவபெருமானுடைய வாழ்க்கை யில் மங்கலத்தை உண்டாக்கிள்ை. சிவம் என்ற சொல் லுக்கே மங்கலம் என்ற பொருள் உண்டு. அம்பிகையைப் பிரிந்திருந்தால் அந்த வாழ்வில் மங்கலம் இராது. அவளோடு சேர்ந்திருந்தால்தான் அவன் வாழ்வு மங்கல முடையதாகும்; அவன் மனமங்கலமாக இருப்பவள் அன்னை.

எங்கள் சங்கரளுர் மனிைமங்கலமாம் அவளே.

மங்கலம் என்ப மனைமாட்சி' என்பது திருக்குறள். இல்லறம் செய்பவனுக்கு மனைவியினல் வரும் மாட்சியே