பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்தவமும்கைதவமும் 15 I

இல்லாத இடத்தில் விசிறியை வைத்துக்கொண்டு விசிறிக் கொள்வார்கள். காற்றுள்ள இடத்தில் விசிறிக்கு வேலை இல்லை. - -

ஞானத்தின் முதிர்ச்சியால் சமாதி நிலை பெற்று அதிலும் முதிர்ந்து சகஜ சமாதி நிலையில் வாழும் முக்தர்கள் எது செய்தாலும் அதுவே தவமாக இருக்கும். அவர்கள் நடப்பதே சரியை. அவர்கள் செய்வதே கிரியை. அவர்கள் மூச்சு விடுவதே யோகம். அவர்கள் தூங்குவதே சமாதிநில்ை. அவர்கள் செய்வது சதா கால பூஜை. இதையும் தாயுமான வர் சொல்கிருர் . !

'துள்ளுமறி யாமனது பலிகொடுத் தேன் கர்ம

துட்டதே வதைகள் இல்லை துரியநிறை சாந்ததே வதையாம் உனக்கே

தொழும்பனன் பபிடேக நீர் உள்ளுறையில் என்ஆவி நைவேத்தி யம்பிராணன்

ஒங்குமதி துபதீபம் - ஒருகால மன்றிது சதாகால பூசையா ஒப்புவித்தேன்."" இத்தகைய சதாநிஷ்டர்களின் நிலையை அபிராமி பட்டர் நினைக்கிருர். பராம்பிகையின் கிருபையினல் சரியை முதலிய சோபானங்களைக் கடந்து ஆத்மாராமர்களாக விளங்கும் முக்தர்கள் பூசை முதலிய தொண்டுகளைச் செய்வதில்லை. அம்பிகையின் திருவடியில் வி ழு ந் து வணங்குவதில்லை. தம்முடைய இச்சையின்படி எதை எதையோ செய்வதைப்போலத் தோன்றுவார்கள். இதற்குக் காரணம், அவர்கள் முன்பே செய்ய வேண்டிய வற்றை எல்லாம் செய்து முடித்ததுதான். விட்டில் அம்பாரம் அம்பாரமாக நெல்லைக் குவித்து வைத்திருக்கிருன் ஒரு செல்வன். அவன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு வருவாரை யெல்லாம் வரவேற்று விருந்து வழங்கி இன்புறுகிருன். விவசாயம் இன்னதென்று தெரியாத