பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னையின் கருணை 16i

கொடியவளுகிய என்னை ஏற்றுக்கொள் ளக்கூடாதா?” என்று சொல்லாமற் சொல்வதுபோல இந்த விளியை அமைக்கிரு.ர். s

புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்ருன் இடப்பாகம்

கலந்த பொன்னே!

அப்பொழுதுதான் தோன்றிய நஞ்சாதலின் புது நஞ்சு என்ருர், கொதிக்கக் கொதிக்க இருந்ததை அஞ்சாமல் அப்படியே விழுங்குபவனைப்போல உண்டான். அந்தக் கருணைச் செயலை அடையாளங் காட்டிக்கொண்டு விளங்கு கிறது அவனுடைய கறுத்த பூரீகண்டம். பொன்னே என்ப தற்குப் பொன் போன்றவளே என்றும், திருவே என்றும், பொன்னிறம் உடையவளே என்றும் பொருள் கொள்ளலாம்.

அம்பிகை பரமசிவனுடைய செல்வமாக இருப்பவள்; ஆதவின் பொன்னக விளங்குகிருள். லக்ஷ்மிக்கும் லக்ஷ்மீ கரம் தருகிறவள்; ஆதலின் திருவாகப் பொவிகிருள். சுவாதிஷ்டானத்தில் காகினி என்னும் திருநாமத்தோடு அம்பிகை எழுந்தருளியிருக்கும்போது பொன்னிறம் உடைய வளாகக் காட்சி அளிக்கிருள்; பீதவர்ணு' என்பது லலிதா சகசிரநாமம்.

குற்றம் பொறுத்தல் பெரியோருக்கு இயல்பு என்று பொதுவாகக் கூறி, குறிப்பாகப் பரமசிவன் செய்தது போல நீயும் செய்யவேண்டும் என்று அம்பிகையை விளிக்கும் தொடரால் புலப்படுத்தி, இறுதியில் நான் உனக்குத் தவறு செய்தாலும் உன்னை மறவாமல் வாழ்த்துபவன் என்ற உரிமையைச் சொல்கிருர்,

தாயே, நீ என்னை மறுப்பதற்குரிய அபசாரங்கள் பலவற்றைச் செய்கிறேன். ஆனலும் உன்னையே நான்