பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 மாலை பூண்ட மலர்

வீசுகிறது. அதனுல் பரிமளப் பச்சைக்கொடி' என்று: புகழ்கிருர் அபிராமிபட்டர். அந்தப் பரிமளம் ஞானந்தான், அம்பிகைக்கு, திவ்ய கந்தாட்யா' (631) என்று ஒரு திரு. நாமம் உண்டு.

இவ்வாறு உள்ள் பரிமளப் பச்சைக்கொடியைத் தம் முடைய நெஞ்சில் பதித்து தியானம் செய்கிருர்கள் அன்பர் கள். காமம் முதலிய தீய குணங்கள் அமுத மனத்தில் அம்பிகையின், தியானம் ஏறும்போது, அந்தக் குணங்கள் யாவும் மெல்ல மெல்ல நழுவுகின்றன. அம்பிகையின் ஞானத் திருவுருவத்தின் தொடர்பால் மனம் ஞானமய மாக ஆகிறது. அப்போது அங்கே கவலை இராது; துன்ப உணர்ச்சி இராது; எத்தகைய இடருக்கும் அஞ்சாத சமநிலை அந்த உள்ளத்தில் அமைகிறது. - -

"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது’’

என்ற குறளின்படி அம்பிகையின் தாளை உள்ளத்தில் பதித்தவர்களுக்கு மனக்கவலை போய்விடுகிறது. ஏமாப் போம் பிணியறியோம் பணிவோ மல்லோம், இன்பமே எந்நாளும் துன்ப மில்லை’ என்று அப்பர் சுவாமிகள் சொல்லுவதுபோல ஒரு நன்னிலை உண்டாகிறது. முன் வந்த இடரின் நினைவும் இனி இடர் வரும் என்ற அச்சமும் இல்லாமல் மாசுமறுவற்ற வானம்போல அந்த நெஞ்சம் இருக்கும். அங்கே அம்பிகையின் எண்ணம் அல்லாமல் வேறு யாதும் இராது.

தியான கம்யா (641) என்பது அம்பிகையின் திரு. நாமங்களில் ஒன்று. தியானத்தில்ை அறியக்கூடியவள் என்பது பொருள். ஞானவிக்ரகா (644) என்பது மற்ருெரு திருநாமம். அந்தப் பெருமாட்டியின் திருமேனி முழுவதும் ஞான மயமாக இருப்பது. ஆகவே அவளுடைய