பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சல் என்பாய் 157°

அருளாளர்கள் இறைவனுடைய திருவருள் பெற்ற நம்பிக்கையால் தமக்கு இனிப் பிறப்பில்லை என்ற உறுதிப் பாட்டோடு இருப்பார்கள். ஆயினும் அன்பும் உணர்ச்சியும் மிகுவதனுல் இறைவனிடத்தில் மரணத் துன்பத்தினின்றும் தம்மைப் பாதுகாக்கவேண்டும் என்று சொல்வார்கள். செலவுக்குப் பணம் வேண்டியவர்கள் வேண்டிய அளவு பணம் பெற்றிருந்தாலும் பின்னும் சேமித்து வைப்பது போல இறைவன் காப்பாற்றுவான் என்ற உறுதி இருந்தா லும் மீட்டும் இத்தகைய வேண்டுகோளைச் செய்வார்கள்.

'ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்

ஒக்க அடைக்கும்போது உரை மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணியனே'

என்று அப்பர் சுவாமிகள் பாடுகிரு.ர். அபிராமி பட்டரும் ஆம்பிகையை நோக்கி இத்தகைய விண்ணப்பத்தைச் செய்து கொள்கிரு.ர். சென்ற பாட்டில் அம்பிகை பிறவிப் பிணியினின்றும் அன்பர்களைப் பாதுகாப்பாள் என்று சொன்னவர் இந்தப் பாட்டில் மரணத் துன்பத்தினின்றும் காப்பதற்குரியவன் என்ற எண்ணத்தை வெளியிடுகிரு.ர்.

உடம்பாகிய குடிசைக்குள் புகுந்து உயிர் வாழ்கிறது. வாடகைக்கு வீட்டில் இருப்பவர்கள் எப்போதுமே அந்த வீட்டில் இருக்கமுடியாது. சிதிலமான வீடாக இருந்தால் ஒரு காலத்தில் இடிந்துபோகும். அப்போது வீட்டைவிட்டு வெளியேறவேண்டும். நம்முடைய உடம்பும் ஒரு காலத்தில் சிதிலமடைந்துவிடும். அந்தக் காலம் இன்னதென்று நமக்குத் தெரியாவிட்டாலும் அதற்கென்று வரையறை யான கணக்கு உண்டு. அந்தக் கணக்கின்படி யாவும் நடைபெறும். இத்த்னே காலந்தான் இந்த உடம்பில் உயிர் வாழவேண்டும் என்ற கணக்குக்குப் பிறகு ஒரு கணங்கூட