பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மாலை பூண்ட மலர்

பிறவி இல்லை என்ற உறுதியான நிலக்கு வந்தவர் ஆசிரியர். எல்லாமே இறைவியின் திருவருளால் விளைந்தவை என்று உணர்ந்து பாடுகிறர். -

அவள் திருவடி பணியும் பணியையே செய்யும் நிலையை இப்போது சொன்னர். அதுமட்டும் எளிதில் வந்துவிடுமா? அடிப்படையான நிலைகளில்தான் அல்லல் அதிகம். மனம் பல பல திசைகளில் தாவும். முன்பே பல பிறவிகளில் பூசிக் கொண்ட வாசனைகளாகிய அழுக்கு களோடு இந்தப் பிறவியிலும் பல மாசுகளை ஏற்றிக் கொள்கிறது. எத்தனை காலம் வாழ்கிருேமோ. அத்தனை காலம் மாசுகள் ஏறிக்கொண்டே இருக்கின்றன. மாசற்ற உள்ளமுடைய குழந்தை வளர்ந்து உலகத்தில் பழகப் பழக அதன் உள்ளம் மேலும் மேலும் ஆசை முதலிய அழுக்குகளை ஏற்றிக்கொள்கிறது. இந்த அழுக்கு இருக்கிற வரைக்கும் இறைவியிடம் பக்தி நன்முகப் படியாது. அழுக்குள்ள சுவரில் சித்திரம் எழுத இயலாது. ஆகவே நெஞ்சத்தில் உள்ள அழுக்கைப் போக்கிக் கொண்டால்தான் அம்பிகையின் வழிபாடு பிடிக்கும். இதுதான் மிக மிக அடிப்படையான செயல்: மேலே கட்டும் பெரிய திருமாளிகைக்கு அஸ்திவாரம் போன்றது. பல பல பிறவிகளில் பூசிக்கொண்ட அழுக்கையல்லவா போக்கவேண்டும்? - -

இதைப் போக்குவது எப்படி? இதுவும் நம்முடைய முயற்சியால் நிறைவேறுவது அன்று. அன்னையின் அருள் தான் .இந்த அழுக்கைப் போக்க வேண்டும். நாம் உலகில் காணும் புனல் யாவும் அழுக்கேறியது. அழுக்குப் புனலால் அழுக்கைப் போக்க முடியுமா? சாக்கடைத் தண்ணிரைக் கொண்டு வீட்டைச் சுத்தம் செய்யலாமா? -

ஆதலால் தூயதாக உள்ள புனலால் இந்த அழுக்கைக் கழுவவேண்டும். அந்தப் புனலும் வேகமாக வெள்ள