பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ry

32 - மாலை பூண்ட மலர்

வார்கள். அந்த விடுதலையே முக்தி. அந்தப் பக்தர்கள் செய்வதே தவம். நில் காம்யமான தவத்தைப் புரிபவர் களுக்கு முக்தியை அவள் வழங்குகிருள். ஆனந்தமய மானது முக்தி நிலை. ஆனந்தமே உருவமாக இருப்பவள் அம்பிகை; ஆகவே முக்தியும் அவள் சொரூபந்தான். அதல்ை அம்பிகைக்கு முக்தி ஸ்வருபிணி' (லலிதா. 737) என்ற திருநாமம் அமைந்தது.

தவம் முயல்வார் முத்தியும்

முத்திக்கு வித்தாயும் அம்பிகை இருக்கிருள். முத்தி ஞானத்தில்ை கிடைப்பது. ஞானமே அவள் திருவுருவம், மக்களுக்கு உள்ள அவித்தையே பிறவிக்குக் காரணம் அது போனல் பிறவியினின்றும் விடுதலை பெறலாம்; முத்தி யின்பத்தை அடையலாம். அவித்தை அல்லது அறியாமை போவதற்கு ஞானம் வேண்டும். அது விரிந்து பரந்து உண்மையைப் புலப்படுத்தும். அறிவு வளர்ந்து மலர்ந்து தெளிந்து நிற்கும்போது அறியாமை ஓடிவிடும். முத்திக்கு வித்தான மெய்ஞ்ஞானமாக இருப்பவளும், அதனல் விகசிதம் பெறும் சிறந்த அறிவாக இருப்பவளும் அம்பிகையே. - -

முத்திக்கு வித்தும் வித்தாகி

முளைத்து எழுந்த புத்தியும்

அவரவர்களுடைய அறிவினுக்குள் இருந்து அதை அறியும்படி செய்கிறவள் அம்பிகை. அறிவு வயிரம் போன்றது. வயிரம் இருளில் ஒளி விடாது. ஒளியில் மிகச் சிறந்து ஒளிரும். அதுபோல அறிவு ஒளிர்வது அதனூடே அன்னை இருந்து அறிவிப்பதனுல்தான். அறிவென்னும் விளக்குக்கு ஒளிதரும் சுடர் அவள். அறிவென்னும் மலரை மணக்கச் செய்கிறவள் அவள். - -