பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரையேற்றும் உமையவள் 39

அவளுடைய கருணைத்திருவுள்ளம், எந்த விதத்திலும் ஆட்கொள்ளப்பட்டவர்களை இன்னலில் அகப்பட்டுக் கொள்ளும்படி விடச் சம்மதியாது. -

இனி நான் என் செயினும், நடுக்கடலுள்

சென்றே விழினும், கரையேற்றுகை கின் திருவுளமே. -

அவளுக்குத் தெரியாமல் நமக்கு எந்தத் தீங்கும் வராது. அவள் பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந் துள்ள பரிபூரணவஸ்து, -

- ஒன்றே:

இரண்டாவது பொருள் ஒன்றும் இன்றி எல்லாமாய் இருப்பவளாதலின் அவளை, ஏகாகினி' என்று லலிதா சகசிரநாமம் (665) கூறுகிறது. திருக்கோவையாரில், 'யாவையுமாம் ஏகம்' என்ருர் மாணிக்கவாசகர்.

பராசக்தி ஒருத்தியே ஆலுைம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு உருவமும் நாமமும் கொண்டு எழுந்தருளி யிருக்கிருள். அது மட்டும் அன்று; வெவ்வேறு கொள்கை யுடையவர்கள் எம் தெய்வம் என்று கொண்டாடி வழிபடும் பல உருவங்களும் அவளுடைய வடிவங்களே. பஹ"ரூபா" (854) என்பது அன்னையின் திருநாமங்களுள் ஒன்று. பிரபஞ்சமெல்லாம் அவளுடைய திருவுருவே ஆதலின் அவள் அந்த அந்தப் பொருளாய் வடிவெடுத்து இலங்குகிருள் என்றும், இயல்பான பரத்துவ நிலையில் அவள் அருவாக இருந்தாலும் வெவ்வேறு செயல்களை மேற்கொண்டு இயற்றும்பொழுது வெவ்வேறு வடிவங்களை எடுக்கிருள் என்றும் தேவீ புராணம் கூறும். - -

? வெகு ரூபி சுக நித்தியகல்யாணி'

என்றும்.