பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிமேல் 47

ஆராய்ச்சிக்கு இடம் இல்லை அல்லவா? அபிராமிபட்டர் அந்த நிலையில் இருக்கிரு.ர்.

"அவர்களே எம்மைத் தடுத்து ஆண்டுகொண்டு தம்மிடம் அன்பு செய்யும் நெறியில் எம்மை ஈடுபடுத்தி யருளிஞர்கள். இனி வேறு நெறிகளைப் பற்றிய ஆராய்ச்சி எதற்கு? இனி எமக்கு வேறு நெறிகளே இல்லை; வேண்டியதே இல்லை என்கிரு.ர்.

உமையும் உமையொரு பாகனும்

ஏக உருவில வந்து இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்;

இனி எண்ணுதற்குச் சமயங்களும் இல்லை.

'இனிமேல் எதைக் கடைப்பிடிப்பது என்று எண்ணி ஆராய்வதற்குரிய சமயங்கள் வேறு இல்லை’ என் கிரு.ர்.

சமயம் என்பது இறைவனே அடையும் வழி; ஆதலால் அதை மார்க்கம் என்று சொல்வதுண்டு. உயிர்க்கூட்டம் அத்தனையும் இயங்கிக்கொண்டே இருக்கின்றது; வழி நடந்துகொண்டே இருக்கின்றது. இந்த ஜீவயாத்திரையில், எதை லட்சியமாகக்கொண்டு பயணம் நடைபெறுகிறதோ, அதற்கு ஏற்றபடி இன்ப துன்ப விளைவு இருக்கும். பெரும்பாலும் ஜீவர்கள் சன்மார்க்கமாகிய நன்னெறியை விட்டுத் துன்மார்க்கமாகிய புன்னெறியிலே செல்கிருர்கள். அதன் பயனக மேலும் மேலும் பிறவியை எடுத்து அல்லத படுகிருர்கள். அவர்கள் செல்லும் நெறி சாகும் நெறி.

அதற்கு எதிரர்க இருப்பது ஆகும் நெறி; வளர்ச்சி பெறும் வழி. நிரதிசய ஆனந்தமாகிய மாளிகையை அடையும் வ்ழி அது. அதுவே அன்பு நெறி. அந்த நெறியில் புகுந்தவர்கள் லட்சியத்தை அடைவது நிச்சயமாகையால் அவர்கள் வேறு நெறியைக் கவனிக்க வேண் டாம்