பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மாலை பூண்ட மலர்

ஆட்கொள்ள எண்ணினர். தம்மிடம் அன்பு செய்யும்படி எங்களை வசப்படுத்தித் தடுத்து ஆண்டுகொண்டனர்' என்ற கருத்துடன் இவ்வாறு சொன்னர். . . .

இறைவனிடம் அன்பு செய்வதற்கும் அவன் அருளே கருவியாக இருந்து தூண்டவேண்டும். அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்று மணிவாசகப்பெருமான் அருளினர். நினைப்பித்தால் நின்னை நினைப்பேன்’ ’ என்பது மற்ருேர் அருளாளர் வாக்கு. ஆகையால், அன்பு செய்ய வைத்தார்’ என்ருர். - .

நாமாக விரும்பி நம்முடைய சிற்றறிவால் ஒரு முடிவு பண்ணி ஒரு காரியத்தைச் செய்ய மேற்கொண்டால், பிறகு அதில் விளையும் தீங்குகளை அநுபவத்தில்ை அறிந்து அந்த முயற்சியைக் கைவிட வேண்டியிருக்கும்; அல்லது அறிஞர் இது தவறு என்று அறிவுறுத்தினாலும் அதனைத் தொடர்ந்து செய்யமாட்டோம். ஆனல் முற்றறி. வுடையவனகிய இறைவனே விரும்பி நம்மைத் தன் அடியானுக்கிக்கொண்டால் அதைவிட வேறு பாக்கியம் ஏது? நாம் கவலைப்பட என்ன அவசியம் இருக்கிறது: -

தண்ணீர் இல்லாக் காட்டில் நீர்வேட்கை கொண்டு தவிக்கிருன் ஒருவன். அவனைச் சந்திக்கிறவர்கள் வெவ்வேறு இடத்தில் நீர்நிலை இருக்கிற செய்தியைச் சொல்கிரு.ர்கள். எந்த இடத்துக்குப் போளுல் எளிதில் நல்ல நீர் கிடைக்கும் என்ற யோசனையில் அவன் ஆழ்ந் திருக்கிருன். சொன்னவர்கள் யாவரும் தாம் தாம் அருந்திய நீரே சிறப்பானது என்று சொல்லியிருக்கிருர்கள். அப்போது ஒரு கருணையாளர் கங்கை நீரை ஒரு குடம் நிறைய அவன் இருக்கும் இடத்துக்கே கொண்டு வந்து, இந்தா, உன் வேட்கை திரும் மட்டும் குடி' என்று கொடுக்கிருர். அவனும் உண்டு தாகம் தீர்கிருன். அப்பால், எங்கே தண்ணீர் கிடைக்கும் என்ற