பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@&fGພ. - 45

அம்பிகையும் அவளைத் தன் பாகத்தில் வைத்த பெரு மானும் ஒரே வடிவில் இணைந்து வந்து ஒன்றுக்கும் பற்ருத எளியேனையும் என் போன்ற பிறரையும் தம்பால் பக்தி பண்ணும்படி அருள் பாலித்தார்கள்' என்று மனநிறை வுடன் சொல்கிரு.ர். -

உமையும் உம்ை ஒரு பாகனும்

ஏக உருவில் வந்து இங்கு

எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்.

ஏக உருவில் வந்தவர் யார்? அர்த்தநாரீசுவரர் என்று போற்றும் சைவர்கள் அந்த மூர்த்தம் மாகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைத்தில் ஒன்று என்று கொண்டாடு வார்கள். ஆகவே அவர்கள், எங்கள் பெருமான் அர்த்த நாரீசனுக ஒழுந்தருளின்ை' என்பார்கள். அன்னையின் பக்தர்களோ, 'அன்னையின் அருள் வடிவான கோலங் களில் அர்த்தேசுவரநாரியாக, பூரீகண்டார்த்த சரீரிணி யாக இருப்பது ஒன்று. எம்பெருமாட்டியே அந்த வடிவில் எழுந்தருளுவாள்' என்று கூறுவார்கள். அபிராமிபட்டரும் அப்படிச் சொல்கிறவர்தாம். ஆளுல் இங்கே இரண்டு சாராருக்கும் பொருத்தமாக, "இருவரும் ஏக உருவில் வந்தனர்' என்கிருர், "எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்' என்பதில் உள்ள எமையும் என்றது தம்மையும் தம்மைச் சார்ந்த அன்பர் கூட்டத்தை யும் சேர்த்துச் சொன்னபடி அன்னையிடமும் அப்பனிடமும் அன்பு செய்வது எங்கள் கடமையாக இருக்க, அதனை மறந்து யார் யாரிடமோ அன்பு செய்தோம். இந்த அவல நிலையில் கிடந்த எங்களைக் கரையேற்றத் திருவுளங் கொண்டனர் அவ்விருவரும். தம்மை மறந்து வாழ்கின்ற வர்களாயிற்றே என்று புறக்கணிக்கவில்லை. பிள்ளை மறந்தாலும் பெற்றேர் மறவாமல் இருப்பது அன்பின் இயல்பு. ஆகவே தகுதி இல்லாத எங்களையும்.