பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறலரும் தவம் 77.

சிவபிரானுடைய தலையில் மிக மிக இரகசியமாக வைக்கிருள். அம்மையும் அப்பனும் அந்தரங்கமாகப் பழகும். இடத்தில் நிகழ்கிற காரியம் இது. இது அம்பலத்தில் வராதது. ஆலுைம் அடியார்கள் அறிந்தது.

அம்பிகையும் அப்பனும் தனித்து இருக்கும்போது அவர்களுடைய உறவுக்குச் சுவை மிகுதியாக வேண்டு மல்லவா? அப்போதுதான் பிரபஞ்ச சிருஷ்டியும் உயிர் களி னிடம் கருணையும் தோன்றும். அதனல் அம்பிகை ஊடல் கொள்கிருள். அதனைத் தணிப்பதற்காக எம்பெருமான் காமேசுவரியாகிய தேவியை வணங்கு கிருன்.

'ஆதி ಬಹ677 தனதுாடல் தணிப்பான் பணிய’’ என்று பிரபுலிங்க லீலை சொல்கிறது. -

. சரளுர விந்தம்...எம்பிரான் முடிக்கண்ணியதே' (11); என்று (pirGT பாடினர் அபிராமிபட்டர். .

  • பனிமாமலர்ப் பாதம்வைக்க... - - கொன்ைறவார் சடையின் மேலினும்' (60).

தைவந்து நின் அடித் தாமரை சூடிய

சங்கரற்கு ' . . . - . (97).

என்று பின்னும் பாடுவார்.

ஊடற்காலத்தில் பணியும் காமேசுவரன் திருமுடிமேல் திருவடியை நீட்டுகிருள் அம்பிகை. அப்போது திருமுடியி' லுள்ள சந்திரன் அந்தத் திருவடியில் படுகிறது; அதன் முத்திரை படிகிறது. இறைவன் பிறைச்சந்திரனைத்தானே முடியில் வைத்திருக்கிருன்? அந்தச் சந்திரகண்டமாகிய திங்கட்பகவின் மணம் அம்பிகையின் அடியில் மணக்கிறது. அதை அடியார்கள் உணர்ந்து கொள்கிருர்கள். -