பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபெருமான் பெற்ற தோல்வி 97

அழகுப் புன்னகையை உடையவள் அவள். அதனை நூறு பாடல்களால் மந்தஸ்மித சதக'த்தில் பாடியிருக்கிரு.ர். முககவி. - -

காதலன் காதலியின் மொழிக்காக ஏங்கி அவள் வாயையே பார்த்துக்கொண்டிருக்க, அவள் மெல்ல முறுவல் பூக்க, அந்த முறுவலிலே உறவுக்குறிப்புத் தோன்றுவதை உணர்ந்து மகிழ்ந்து அவளை அணுகுவான். அகப்பொருள் நூல்களில் முறுவற்குறிப்புணர்தல்' என்று ஒரு துறை உண்டு. சிவபெருமான் அவ்வாறு முறுவற்குறிப்புணர்ந்து அணுகி அம்மையோடு ஒன்றுபடுகிருன். அவளுடைய நகில் கள் அவனைக் குழைவிக்கின்றன.

ப்ாகன் அகம் குழைவித்த பவித்ர பயோதரி' என்று தக்கயாகப்பரணியும், -

'எந்தை......திருமேனி குழையக் குழைத்திட்ட

- அணிமணிக் கிம்புரிக் கோடு ஆகத்ததாக’’ என்று மீளுட்சியம்ம்ை பிள்ளைத் தமிழும் கூறுவதை முன்பு பார்த்தோம். - - t -

அம்பிகையுடைய நகில்கள் யாரும் வாய்வைத்து அருந்தாத சிறப்புடையவை. கருணையும் ஞானமுமே அம்மையின் தனங்களாக உள்ளன. அவற்றிலிருந்து வரும் பால் கருணையையும் ஞானத்தையும் உண்டாக்குவன.

ஆதி நாயகன் கருணையாய் அமலமாய்ப் பரம - -

போத நீரதாய் இருந்ததன் கொங்கையிற் பொழிபால்" என்று கந்தபுராணம் கூறுவது இங்கே நினைப்பதற்கு உரியது. - -

திரிபுரசுந்தரியாகிய காமேசுவரி காமேசுவரைேடு ஒன்றுபடுவதனால் உலகமெல்லாம் இன்பம் பெற்று

- - - 7-س-LprT 3%u