பக்கம்:மாவிளக்கு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவு ஒரு மணி 1 09

தாள். அவள் வேறு யாரும் அல்லள் : மக்வீலின் வீட்டில் வேலேக்காரியாக இருந்த ஆண்டாள்தான்.

இன்ஸ்பெக்டர், அங்கு என்ன செய்கிருய் ? உள்ளதைச் சொல் ; இல்லாவிட்டால் உன்னை இலேசில் விடமாட்டேன் ' என்று கர்ஜித்தார். ஆண்டாள் மெதுவாக எழுந்தாள். அவள் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும், கண்களில் ஒருவிதமான உறுதி ஒளிவிட்டுக் கொண்டிருந்தது ; அதே சமயத்தில் அவை பார்ப்போர் மனத்தை இளக்கி வசப்படுத்தக் கூடியனவாயும் தோன்றின.

இன்ஸ்பெக்டரை இவைகளெல்லாம் அசைக்க வில்லை ; பணத்தின் சத்தம் தவிர வேறு எதுவும் அவரை இதுவரை அசைத்ததே இல்லே. ' பெட்டியில் என்ன பார்த்துக் கொண்டிருந்தாய் சொல்லு-இல்லா விட்டால் - * * * * 够 ’ என்று மறுபடியும் அதட்டினர்.

வேலைக்காரி ஆண்டாள் கையைப் பிசைந்து கொண்டே அங்கே கிடந்த ஒரு பெரிய சாய்வு நாற்காலி அருகில் வந்தாள். சுழல் துப்பாக்கியுடன் கிற்கும் தனது எஜமானனைக் கல்லேயும் கரைக்கக்கூடிய விதமாய் அவள் ஒரு பார்வை பார்த்தாள். நேராக கிற்கக்கூட அவளால் முடியவில்லை. அந்த கிலேயில் அவளேக் கண்ட எவரும் அவள் கெட்ட எண்ணத்துடன் பெட்டியைத் திறந்திருப் பாள் என்று கூறவே மாட்டார்கள். இன்ஸ்பெக்டரோ அவளே மிக்க வெறுப்புடனும் கோபத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தார். அதைச் சகிக்க முடியாத ஆண்டாள் பெருமுயற்சி செய்து பேசலாள்ை :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/111&oldid=616212" இலிருந்து மீள்விக்கப்பட்டது