பக்கம்:மாவிளக்கு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ால யந்திரம் i&i

" சித்தர்கள் கினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் செல்லுகிருர்கள். இது சாத்தியங்தான். ஏனெனில், இது காலத்தின் போக்கை அனுசரித்தே கடக்கிறது. ஆனல் கான் மட்டும் எதிர் காலத்திற்குள் 10 வருஷம் முன்னே சென்றுவிட்டால் உலகம் என்னுடன் வருமா ? .

" அப்பா, இதைக கண்டு பிடிக்கவா இத்தனே காள் உடம்பைக் கெடுத்துக் கொண்டு வேலை செய்தாய் ? எதிர் காலத்திற்குள் போக முடியாது என்பதுதான் தெரிந்த விஷயமாச்சே." -

" நான் போக முடியாதென்று எப்பொழுது சொன் னேன் ?” என்று என்மீது சீறின்ை. கொஞ்ச நேரம் நெற்றியில் கையை வைத்துக்கெண்டு உட்கார்ந்திருக் தான். பிறகு வெள்ளிப் பாத்திரத்தில் வைத்திருந்த இளநீரைச் சிறிது சுவைத்துக் கொண்டான்.

இளநீர் இல்லாவிட்டால் மூளை கொதிக்கி றதாம்.

பிறகு சற்று அமைதியாகப் பேசினன். இந்த உடலோடு காலத்தில் பிரயாணம் செய்ய வேண்டிய அவசியமில்லே. உள்ளம் அதில் சென்று கடந்ததையும், கடக்கப் போவதையும் பார்க்க முடியும். இதுவரை எல்லாம் அனுமானமாக கடந்தது. விஞ்ஞான முறையில் யந்திரத்தின் உதவியாலே யாதொரு தவறும் நேராதபடி காலத்தில் இனிமேல் பிரயாணம் செய்யலாம். சென்று மறைந்த உண்மையையும், வரப் போவதையும் அப் படியே காணலாம். எனது யந்திரம், அதற்கு உதவி செய்யும்.” l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/133&oldid=616258" இலிருந்து மீள்விக்கப்பட்டது