பக்கம்:மாவிளக்கு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீதன ஆடு I 5.1

டிருக்கிருன். அதை விற்று 15 ரூபாய் வள்ளியாத் தாளுக்கு, 5 ரூபாய் கிழவிக்குப் புடவை வாங்க-இன் லும் அஞ்சு இருக்கிறது. அதைக்கொண்டு ஒரு ஆட்டுக் குட்டி வாங்கிவிட்டால், ரண்டு வருசத்திலே பலன் பட்டுவிடும். ல்ேலா மேய்ச்சால் ரட்டைக் குட்டியாப் போடும். எப்படியும் மகளுக்குச் சீதனம் கொடுக்காமலா போவேன்? ஆடு திருட்டுப்போன விசயம் வள்ளியாத் தாளுக்குத் தெரியப்படாது. தெரிஞ்சால் ரொம்ப விசனப் படுவாள். மருமகனுக்கும் பெருத்த அவமானம் வரும். ஏதோ குடி வெறியிலே கெட்ட சேர்க்கையால் இப்படிப் பண்ணி விட்டார். கல்ல வேளை ; வேறு எங்காவது திருடி உதை பட்டிருந்தால்...... கிழவியிடம் எச்சரிக்கை பண்ணிவிடவேணும். அவள் வாய் சும்மா இருக்காது.” இப்படிக் கிழவன் எண்ணமிட்டுக் கொண்டே வீட்டை நோக்கி கடந்தான்.

அவன் உடம்பிலே ஒரு புதிய தெம்பு ஏறிக்கொண் டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/153&oldid=616301" இலிருந்து மீள்விக்கப்பட்டது