பக்கம்:மாவிளக்கு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மா விளக்கு

ஏழு நாட்களுக்கு முன்புதான் காளி அக்தக் கொடிய அரிவாளேத் தன் இடுப்பிலுள்ள இரட்டை அரை நாணிலே செருகினன். கங்கப்பன் தலையை வாங்காமல் இதை இடுப்பிலிருந்து எடுப்பதில்லை. கன்னியம்மன் மீது ஆணே என்று சபதம் செய்து கொண்டிருந்தான். அந்தச் சபதம் கிறைவேறத் தருணம் வாய்த்துவிட்டது.

காளி அரிவாளே எடுத்தான். பட்டினி மயக்கத்தி லும் அவனுடைய கோபவெறி ஒரு சக்தியைக் கொடுத்தது. கங்கப்பன் தலையைத் துண்டிக்கும் நோக்கத்தோடு பல்லேக் கடித்துக்கொண்டு அரிவாளே ஓங்கி வீசியெறிந்தான்.

1958-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 32-ம் தேதியன்று வங்காளக்குடாக் கடலில் கடந்த சம்பவம் இது. ஆறு நாட்களுக்கு முன்னல் அதாவது 16-ஆம் தேதி இரவு சென்னைக் கடற்கரையை விட்டுச் சுமார் நூறு கட்டு மரங்கள் கோலா என்னும் ஒருவகைப் பறக்கும் மீன் வேட்டைக்குப் புறப்பட்டன. ஒரு கட்டுமரத்திலே சாதாரணமாக மூன்று கான்குபேர் போவார்கள். ஆனல், காளியும் கங்கப்பனும் இந்த முறை தனித்தனியாகவே சென்ருர்கள்.

ஒவ்வொரு வருஷமும் ஜூன் மாதத்திலே இரண்டு மூன்று வாரங்களுக்கு இந்த மீன்கள் கூட்டங் கூட்ட மாகப் பறந்து வரும். சென்னையை விட்டு சுமார் நாற்பது மைல் கடலுக்குள்ளே சென்ருல் அவை வரும் பகுதியை அடையலாம். எளிதிலே கொழுத்த வேட்டை கிடைக்கும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/36&oldid=616059" இலிருந்து மீள்விக்கப்பட்டது