பக்கம்:மாவிளக்கு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 மாவிளக்கு

எனக்கு மோட்ச விளக்கு ' என்று தழுதழுத்த குரலில் சொன்னுள். -

" மோட்ச விளக்கா ? இல்லே பாட்டி. நான் மாவிளக்கு எடுக்கிறேன்.”

  • அதுதானம்மா எனக்கு மோட்ச விளக்கு.” * பாட்டி, நீயும் அம்மாளைப் போலவே பேசறயே ? மோட்ச விளக்குன்ன எனக்குத் தெரியாதா? அன்னைக்கு மேற்காலே வீட்டுப் பெரிய தாத்தா செத்துப் போனரே, அவருக்குக் காவிரியிலே மோட்ச விளக்கு விட்டாங்களே நானே பார்த்தேனே-அது உனக்கு வேண்டாம், நீ சாகப்படாது பாட்டி’

இல்லம்மா, கண்ணு. நான் சும்மா சொன்னேன். நீ மாவிளக்கு எடுத்தால் அதுவே எனக்குப் போதும்.” என்று சொல்லிக் குழந்தையைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

" வள்ளியாத்தா, ரொம்ப நேரமாய்ட்டுதே ? லக்ஷ்மிக்குச் சோறு போடு-அவள் தூங்கிப் போவாள்.'

" பாட்டி, நான் உன்னேடுதான் சாப்பிடுவேன்.” * இன்னேக்கு நான் விரதம் கண்ணு-சாப்பிட மாட்டேன். நீ போய் அப்பாவோடு சாப்பிடு.”

வள்ளியாத்தாள் விளக்கேற்றி வைத்துவிட்டு லக்ஷமியைக் கூட்டிக்கொண்டு போய்விட்டாள். முத்தம் மாள் தனியாக உட்கார்ந்து எண்ணமிட்டுக் கொண்டி ருந்தாள். சென்றுபோன கால் நூற்ருண்டில் அவள் வாழ்க்கையிலே நடந்த முக்கியமான சம்பவங்களெல்லாம் அவள் மனக் கண் முன்பு திரைப்படக் காட்சி போல வந்து கொண்டிருந்தன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/64&oldid=616116" இலிருந்து மீள்விக்கப்பட்டது