பக்கம்:மாவிளக்கு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவிளக்கு 63

' என் குழந்தைகள் காலும் இருந்திருந்தாலும் இத்தனே அன்போடு இருந்திருக்குமா ? சந்தேகங்தான். அப்பனேப் போல அவைகளும் ஆயிருக்குமோ என்னவோ ? ம்...... அதெல்லாம் இப்போ எதுக்கு நினைக்கவேனும் வள்ளியாத்தாளும் இந்தக் குழந்தை லக்ஷ்மியும் மாரியாத்தா தயவிலே சுகமாக இருந்தால் போதும். மாரியாத்தாதான் வள்ளியாத்தாளே அன் றைக்குக் காப்பாத்தினுள். அவளும் சிறு வயதிலே இறந்திருந்தால் ஊராரெல்லாம் என்னை எப்படிக் கேவல மாகப் பேசி யிருப்பார்கள். வள்ளியாத்தாளுக்கு உடம்பு சரியில்லேங்கற போதே பேச ஆரம்பிச்சுட்டாங் களே. நாலு பிள்ளையைத் தின்றவள் இதை வளர்க் கிருள் ; அவள் கையிலே இதுவும் பிழைக்கவா போகு துன்னு என் காதிலே விழும்படி பேசினர்கள். மாரி யாத்தாதான் காப்பாத்தினுள். நான் உயிரோடிருக்கிற வரையிலே என் கையாலே நான் சம்பாதிச்ச பணத்தைக் கொண்டு மாரியாத்தாளுக்கு மாவிளக்கு எடுக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன். அந்த வேண்டுதலே வீண்போகலே. வள்ளியாத்தாளே ஆறுமாதக் குழந்தையிலேயே விட்டு விட்டு அந்த அம்மா செத்துப் போய்விட்டாள். நானே அவளுக்குத் தாயாக இருந்தேன். அதைப்பற்றி ஊரிலே என்னன்னமோ பேச்சுக்கூட வந்தது. அவங்ககூடச் சந்தேகப்பட்டாங்க , குடிச்சுட்டு வந்து அடி அடின்னு அடிச்சாங்க. ம்...குடிக்கிற புருசனிடம் வாழறதானுல் அப்படித்தான். இருந்தாலும் அவங்க கல்லவங்கதான். பிறந்த காலு குழந்தையும் போய்ட்டுதேன்னுதான் அவங்களுக்கு என்மேலே கோவம். வள்ளியாத்தாளே அவங்களுக்கு ஏனே பிடிக்கவே இல்லை. கடைசியிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/65&oldid=616118" இலிருந்து மீள்விக்கப்பட்டது