பக்கம்:மாவிளக்கு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மாவிளக்கு

குடிச்சே உயிரை விட்டாங்க. பண்ணேக்காரர் ரொம்ப நல்ல மனசு. தங்கமுன்னு தங்கம் அவங்கதான். என் வீட்டுக்காரர் குடிவெறியிலே கன்னப்பின்னன்னு பேசற தைக் கூடப் பொறுத்துக்குவாங்க. அவங்க குணத்துக்கு ஏத்தமாதிரியே நல்ல பெண்ணு வள்ளியாத்தாள் பிறங் தாள். வள்ளியாத்தாளே கான் என் பிள்ளைமாதிரியே வளர்த்ததைப் பண்ணேக்காரர் மறக்கவில்லை. இல்லாது போனல் இப்போ கான் எத்தனை சங்கடப்பட வேணுமோ ? நல்ல வேளையரக வள்ளியாத்தாளுக்குப் பிடிச்ச புருசன வந்து சேர்ந்தான். பட்டணத்திலே வேலே. வள்ளியாத்தா காட்டுப்பாளையத்திலே என் கூடவே இருந்தால் எனக்கு சந்தோசமாகத்தான் இருக்கும். ஆனால், அவள் எங்கிருந்தாலும் சுகமா இருந்தாப் போதும். இனிமேல் அதைப் பத்தி என்ன ? என் காரியங்தான் முடியப்போகுது. இப்படி யெல்லாம் நினைத்துக் கொண்டே முத்தம்மாள் காலே நீட்டி உட்கார்ந்திருந்தாள்.

" அம்மா, இன்றைக்கு நீ விரதமானலும் விளக்கு மாவு மட்டும் கொஞ்சம் சாப்பிடறயா : மாரியாத்தா ளுக்குப் படைத்தது ' என்று கூறிக் கொண்டே வள்ளி யாத்தாள் வேகமாகத் திரும்பி வந்தாள்.

" ஒரு துளி கொண்டாம்மா ” என்ருள் முத்தம்

ԼԸք հXT.

“ அம்மா, உன்னை ஒண்ணு கேட்கிறேன், சொல்லு வாயா ?” என்று கேட்டுக் கொண்டே வள்ளியாத்தாள் இலையைப் போட்டு அதில் விளக்குமாவை வைத்தாள்.

' என்ன அப்படி அதிசயம் கேட்கப் போகிருய் ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/66&oldid=616120" இலிருந்து மீள்விக்கப்பட்டது