பக்கம்:மாவிளக்கு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 6 மாவிளக்கு

அங்கே நிலத்தில் உதிர்ந்து விழுந்து கிடக்கிற நெல்லேப் பொறுக்கி எடுத்துப் போவார்கள். அதை நான் பார்த் திருக்கிறேன். நானும் இந்த விசை அப்படிப் பண்ணி னேன்.” -

இதைக் கேட்கிற போது வள்ளியாத்தாளுக்குக் கண்ணிர் பிதுங்கிக் கொண்டு வந்தது. இப்படி ஒரு தாய் தனக்குக் கிடைத்ததைப் பற்றி அவள் உடல் பூரித்தாள்.

முத்தம்மாளுக்குச் சொந்த ஊர் காங்கயம். அங்கே தொடர்ந்தாற்போல் ஐந்தாறு வருஷம் மழை பெய்யாத தால் கூலி வேலே கூடக் கிடைக்கவில்லை. அதனல் பல ஆண்டுகளுக்கு முன் முத்தம்மாள் தன் கணவனேடு பஞ்சம் பிழைப்பதற்காகக் காட்டுப் பாளையம் வந்தாள். :தாயில்லாக் குழந்தையான எனக்கு மாரியாத்தாள்தான் இந்தத் தாயை அனுப்பினுள் ” என்று வள்ளியாத்தாள் கருதிள்ை.

  • அம்மா, மாவிளக்கு அணையாமலே வீட்டுக்கு வர வேணுமா ?” என்று அவள் கவலையோடு கேட்டாள்.

அவளுடைய குரலில் தொனித்த அந்தக் கவலை முத்தம்மாளுக்குப் புரிந்துவிட்டது.

  • அதனுலே குத்தமில்லே, வள்ளியாத்தா. அது அனஞ்சு போனதேைல கெடுதல் வராது. வரப் போகிறதை அது முன்னலே எனக்குக் காட்டும் அவ்வளவுதான்.” x

' என்னத்தையம்மா உனக்குக் காட்டும் ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/68&oldid=616124" இலிருந்து மீள்விக்கப்பட்டது