பக்கம்:மாவிளக்கு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மா விளக்கு

என் கிலேமையைக் கண்டு முத்துசாமி மனமுருகி விட்டான். அவனுடைய நட்பின் வலிமையை அந்தக் கணத்திலேதான் நான் நன்குணர்ந்தேன். எனக்கு எவ்வித உதவியும் செய்யத் தயாராக இருப்பதாகத் தழுதழுத்த குரலிலே அவன் பேசினன். எனக்கு உதவி செய்ய வேண்டுமென்று அவன் கொண்டிருந்த ஆவலே அவன் முகம் கன்கு காட்டிற்று.

' முத்து, நீ என்ன செய்தாலும் அவளுக்குப் பிடிக் கிறது. உனது பேச்சு எழுத்து எல்லாம் அவளைக் கவர்கின்றன. நீ அவளேக் காதலிப்பதாக இருந்தால் கான் ஒருவாறு சமாதானமடைந்து எனக்குக் கிடைக் காதது என் உயிர் நண்பனுகிய உனக்குக் கிடைத்த தென்று மகிழ்ச்சி யடைவேன். ஆனால், நீயும் அவளைக் காதலிப்பதில்லை; அவளும் என்னேக் காதலிப்பதில்லை” அதற்குமேல் என்னல் பேச முடியவில்லே. தொண்டை அடைத்துக்கொண்டது.

அவள் உன்னிடம் காதல் கொள்வதற்கு என்ன சூழ்ச்சி வேண்டுமானலும் கான் செய்கிறேன் ” என்று முத்துசாமி வாக்குறுதி கூறினன்.

எனக்குச் சட்டென்று ஒரு யுக்தி தோன்றியது. " முத்து, காதலினல் கான் படுத்துயரத்தையெல்லாம் விளக்கி நானே எழுதியதுபோல நீ ஒரு கடிதம் எழுதிக் கொடு. உன்னுடைய எழுத்திலே அவளுக்கு மிகுந்த கவர்ச்சியிருக்கிறது. அந்தக் கடிதத்தைப் பார்த்தாவது அவள் என்மேல் மனமிளகட்டும். உன்னுடைய கற்பனைத் திறனேயெல்லாம் பயன்படுத்திக் கடிதம் எழுதிக் கொடு. என்னல் அவ்வளவு அழகாக எழுத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/76&oldid=616140" இலிருந்து மீள்விக்கப்பட்டது