பக்கம்:மாவிளக்கு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஜமானி 79

இருக்க அது விரும்பாமல் அழுது தொந்தரவு செய்தது. அதற்கு விளையாட பொம்மை கிடைத்ததென்று அந்தத் தாயுள்ளம் மகிழ்ந்தது. -

முத்தி இப்பொழுது எஜமானி ஆகிவிட்டது. வேலைக்காரியின் குழந்தை எச்சுமிக்குப் பொம்மையைக் கண்டு ஒரே உற்சாகம். ஒரு பொக்கிஷம் அவளுக்குக் கிடைத்துவிட்டது போல ஆனந்தம். எஜமானி வீட்டுப் பெண் சரோஜாவின் பொம்மையல்லவா அது ? அது எச்சுமிக்கு எஜமானியாக இல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும் ?

அதைத் தன் விளையாட்டுத் தோழியாகவோ, தன் வேலைக்காரியாகவோ பாவிக்க அவளால் முடியவே இல்லே. அப்படிப்பட்ட எண்ணமே அவள் உள்ளத்தில் தோன்றவில்லை. உடைசலும் கிழிசலுமாக இருந்த முத்தியிடம் அவளுக்குப் பணிவும் மரியாதையுமே ஏற்பட்டன. -

ஒட்டை விழுந்துபோன பழைய மூங்கிற் கூடை ஒன்று குடிசையில் ஒரு மூலையிலே கிடந்தது. அதை எடுத்துக் குப்புறக் கவிழ்த்தாள் எச்சுமி. கந்தல் ஒன்றை மேலே விரித்தாள். அதன் மேலே முத்தியை பயபக்தி யோடு உட்கார வைத்தாள். அதன் வாயிலிருந்து வரும் உத்தரவுக்காக எச்சுமி எதிர்பார்த்து நின்ருள்.

முத்தி தோரணையோடு கூடை மேலே அமர்ந் திருந்தது. ஒடிந்து கிடந்த அதன் கை இப்பொழுது மேலும் கீழும் கம்பீரமாக அசைந்து அதிகாரம் காட்டியது. ஏண்டி எச்சுமி, இன்னும் வீடு பெருக்கி முடியவில்லையா? சோம்பேறிக் கழுதை!” என்று முத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/81&oldid=616150" இலிருந்து மீள்விக்கப்பட்டது