பக்கம்:மாவிளக்கு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று மணி 83

எவ்வளவு கேவலமாக இருக்கிறது ! நாளேக்குக் கட்டாயம் அந்தச் சூதாட்டம் ஆடிப் பார்த்துவிடலாம். போனல் ஒரு மாதச் சம்பளங்தானே போகும் ? என்னுடைய திட்டப்படி ஒரு ஐநூறு வந்துவிட்டால் பிறகு கவலேயே ஒழிந்துவிடும்.

இப்படி அவர் நீள எண்ணமிட்டுக் கொண்டே இருந்தார். மணி மூன்ருகிவிட்டது. அவர் தூங்கி விழலானர். பையன்கள் யாரும் இதை அதிகமாகக் கவனிக்கவில்லை. தினசரி கண்ட விஷயமாதலால் அவர் களுக்கு அதில் புதுமை ஒன்றும் கிடையாது.

மணி மூன்ருனுல் ராமசாமி வாத்தியார் தூங்கி விடுவார் என்பது அந்தப் பள்ளிக்கூடத்தில் மாண வர்கள் எல்லோருக்கும் தெரியும். கடிகாரம்கூடச் சில நாட்களில் பிசகிப் போவதுண்டு ஆல்ை, அவர் தூங்கு வதில் மட்டும் குறிப்பிட்ட காலம் தவறினதே இல்லை.

ராமசாமி வாத்தியார் அதிக நேரம் தூங்கிவிட மாட்டார். ஒரு பதினைந்து நிமிஷன்தான். அதன் பிறகு நிச்சயம் எழுந்துவிடுவார். எழுந்ததும் அதுவரை ஏதோ யோசனையிலிருந்தது போலப் பாவனை செய்து கொண்டு ' என்னடா கணக்குகள் எல்லாம் போட்டாய் விட்டதா ?’ என்று சத்தம் போடுவார். அவர் எழுந்தி ருந்ததைக் கவனியாமல் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்து கொண்டிருக்கும் பிள்ளைகளுக்குச் சுடச்சுட இரண்டு கிடைப்பதும் சகஜம்.

இது நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சி. அடுத்த நாளிலேயே இந்த வாத்தியார் வேலையையே வீசியெறியப் போகிருரே, அந்த ஒரு காளாவது குழந்தைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/85&oldid=616159" இலிருந்து மீள்விக்கப்பட்டது