பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2 " நீங்கள் சொல்லித்தந்து நான் தெ ரி ந் து கொள்ள வில்லை சார். வீட்டில் எங்க மாமா அடிக்கடி இந்தக் கதை சொல்வார். மாமா கதை சொன்னால் தெளிவாகப் புரிகிறது சார். நீங்கள் சொல்வது அவ்வளவு தெளிவாக............... ' என்று சொல்லிக்கொண்டு வந்த ரஹீம் ஆசிரியர் மீசை ஆடிக்காற்றில் சிறகடித்துப் பறக்கும் காகத்தின் இறக்கை யைப்போல் படபடவென்று துடிப்பதைப் பார்த்ததும் நிறுத்திக் கொண்டான். அதே சமயம் மணியடித்தது. ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியேறினார். மாணவர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டு விளையாட்டு மைதானத்தை நோக்கி ஓடினார்கள். கோபாலனுக்கு விளையாடப் பி டி க் க வி ல் லை. அழுது கொண்டே வீடு நோக்கி நடந்தான். வீட்டுக்குப் போகும் வழியில் எதிரில் அவன் தங்கை மீனா வந்தாள். " மீனா மீனா ! எங்கே போகிறாய் ? "

"கடைக்குப் போகிறேன்."

" கடைக்கு எதற்கு ? "

"ரொட்டி வாங்க ! "

" ரொட்டி எதற்கு ? "

"பிட்டுத் தின்ன ! "

"யாரு தின்ன ?"

"நீயும் நானும் !"

இதைக் கேட்டவுடன் கோபாலனுடைய அழுகை மாறி விட்டது. அவனும் மீனாவுட ன் கடைக்குப் போனான். வழியிலே போகும்போதே வீட்டுக்குப் பாட்டி வந்திருக்கிறாள் என்ற விஷயந்தெரிந்தது. பாட்டி கொடுத்த காசு தான், மீனாவைக் கடைக்கு அனுப்பியிருக்கிற தென்ற விவரமும் புரிந்தது. பாட்டி கோபாலனுக்கு எத்தனை எத்தனை கதைகள்