பக்கம்:மாஸ்டர் கோபாலன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

3 சொல்லியிருப்பாள். அத்தனையும் மறந்து மறந்து போயிருக் கிறான் கோபாலன். ரொட்டி வாங்கியவுடன் அண்ணனும் தங்கையும் சிட்டுக் குருவிகள் போல வீ ட் டு க் கு ப் பறந்தோடி வந்தார்கள். பாட்டியைப் பார்த்தார்கள். பாட்டி அவர்களை மகிழ்ச்சியோடு கட்டிக்கொண்டாள். அருகிலே இழுத்து அணைத்துத் தன் பொக்கை வாயால் இரண்டு முத்தங் கொடுத்தாள்.

"கோபாலா ?"

"அம்மா ! "

"காட்டுக்குப் போய்ச் சுப்பி பொறுக்கி வா. காலையிலே ஆப்பம் சுடப் போறேன்".

"ஆப்பமா ? ஆகா ! அம்மா இதோ போகிறேன்" என்று குதித்தோடினான் கோபாலன்.

“டேய் ரொம்ப தூரம் போகாதே காட்டிலே இருக்கே பெரிய முருங்கை மரம் அதுக்கிட்டேப் போகாதே. வேதாளம் புடிச்சு போயிடும்" என்று பாட்டி எச்சரிக்கை செய்தாள்.

"சரி பாட்டி" என்று கூறி விட்டுக் கோபாலன் பறந் தான். கொஞ்ச தூரம் ஓடினான். பிறகு நடந்தான். நடந்து நடந்து காட்டுக்குள்ளே வந்து சேர்ந்தான். காய்ந்து கிடந்த சுப்பிகளைப் பொறுக்கினான். அங்கு மி ங் கு மா க ஓடியும் நடந்தும் சுப்பி பொறுக்கினான். கடைசியாகச் சுப்பியெல்லாம் நிறையச் சேர்ந்த பிறகு அதைக் கட்டுவதற்காக ஒரு மரத் தடிக்குப்போனான். மரப்பட்டையால் சுப்பிகளை ஒரு கட்டாகக் கட்டினான். கட்டி முடித்த பிறகு குனிந்த தலை நிமிர்ந்த போது அவன் கண்ணெதிரே ஒரு முருங்கைக்காய் கிடந்தது. உச்சியில் நிமிர்ந்து பார்த்தான். ஆகா ! அவன் அ ந் த ப் பெரிய முருங்கை மரத்தடியிலே நின்று கொண்டிருந்தான் பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது. வேதாளம் பிடித்துப் போய்விடும் ' அவன் சிறிது பயந்தான். அதே