உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மிசா கால கொடுமைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீற்றிருக்கிறார்-நானும் பக்கத்தில் அமருகிறேன். திருமணவிழா முடிவுற்று மணமக்கள் எங்களிடம் வாழ்த்துக்களைப் பெற்ற பிறகு இருவரும் எழுந்து நின்றோம். அந்த நேரத்தில் ஒரு புகைப்படக் காரர் ஓடோடி வந்து 'இருவரையும் நிற்கவைத்துப் படமெடுக்க வேண்டும்' என்றார். என்னை பக்கத்தில் நில்லுங்கள் என்றார், புகைப்படக்காரர் ஒரு மாலையை காமராசர் கழுத்தில் போட்டார் இன்னொரு மாலையை எடுத்து என்னுடைய கழுத்தில் போட வந்தார். கையில் வாங்கிக்கொண்டேன். காமராசர் நீயும் போட்டுக்கொள் கழுத்தில் என்றார். இருவரும் போட்டுக்கொண் டோம் - புகைப்படம் எடுக்கப்பட்டது. பல பத்திரிகைகளில் அந்தப் படம் வந்தது. அந்தப் படம் எடுக்கப்பட்டு முடிந்ததும் காமராசர் என்ன சொன்னார் தெரியுமா? 'இந்தப் படத்தைப் பார்த்தால் ஓருவன் ரொம்பப் பொறாமைப்படுவான்' என்றார் யார் என்றெல்லாம் கேட்கா தீர்கள் (சிரிப்பு) நீண்டநாள் நெருங்கிப் பழக முடியாவிட்டாலும் நெருங்கிப் பழகிய காலத்தில் காலத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் சாதாரண மானவைகளல்ல. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நேரத்தில் நானும் நாவலர் அவர்களும் பெருந்தலைவர் காமராசர் நோய்வாய்ப் பட்டிருக்கிறார் என்பதை அறிந்து அவரது இல்லத்திற்குச் செல்கிறோம். படுக்கையில் படுத்திருக்கிறார், 'எப்படிஇருக்கிறது' என்று உடம்பைத் தொட்டுக் கேட்கிறேன். உடம்பு கொதித்துக்கொண்டிருக்கிறது. விக்கி விக்கி அழத் தொடங்கினார். "தேசம் போச்சு-தேசம் போச்சு-- தேசம் போச்சு" என்று கண்ணீர் வழிய வழிய மூன்று முறை சொன்னார். நான் அவரிடத்தில் சொன்னேன். தேசம் போச்சு என்று நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இப்பொழுதே நீங்கள் உத்திரவிடுங்கள். நான் மந்திரிசபையை ராஜினாமாசெய்துவிட்டு இந்த நாட்டைக்காக்க நீங்கள் நடத்துகின்ற போராட்டத்தில்