உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மிசா கால கொடுமைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 உங்கள் பின்னால்வர தி.மு. கழகம் தயாராக இருக்கிறது (பலத்த கைதட்டல்) என்று சொன்னேன். அப்போதும்சொன்னார், “இன்னும் பத்துநாள் பொறுத்துக் கொள்" என்று. இப்படிப் பொறுத்துக்கொள் பொறுத்துக்கொள் என்று சொல்லியே நம்மை பொறுத்துக்கொள்ள முடியாத துயரத்திற்கு ஆளாக்கிப் போய்விட்டார் பெருந்தலைவர் காமராசர் என்று எண்ணி எண்ணித்தான் நான் வருத்தப்படுகிறேன். அவரது நினைவு என்றென்றும் நிலைத்திருக்கும்! அவரது வாழ்க்கை என்றென்றும் நமக்குப்பாடமாக இருக்கும். அவரது தியாகம் என்றென்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்! 4. புனித ராஜ்யமா? எம். ஜி. ராமச்சந்தினின் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு செத்துக்கிடப்பதை. நேற்று செங்குன்றம் சிறப்புக் கூட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் பட்டியல் போட்டுக் காட்டினார் நேர்மை - தர்மம் - நீதி எங்கே என்று கேட்டார். இதுதான் புனித ராஜ்யமா என்றும் சாடினார். - அவரது உரை வருமாறு: ர் கழகத்தின் அருமைச் செயல் வீரர் ஒருவரை நினைந்து நடை பெறுகிற நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருப்பதை மறந்து விடு வதற்கில்லை. இந்தப் பகுதியில் தி. மு. கழகத்தின் ஒப்பற்ற செயல் வீரர்களில் ஒருவராக விளங்கியவரும். பேரறிஞ அண்ணா தந்த கொள்கைகளை. இலட்சியமுகட்டை எட்டிப் பிடிப்பதற்காக பம்பரமெனச் சுழன்று பணியாற்றியவருவான வெங்கடேசன் அவர்கள் திடீரென நம்மையெல்லாம் விட்டு மறைந்து விட்டார். நாட்டை நெருக்கடி நிலை உலுக்கிக் கொண் டிருந்தபோது அவருடைய மறைவு நம்முடைய நெஞ்சை குலுக்கத்தக்க வகையில் அமைந்தது.