உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மிசா கால கொடுமைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தி.மு.கழகத்தைப் பொறுத்தவரையில் இப்படிப்பட்ட தொண்டர்களுடைய குடும்பங்கள் திக்கற்றுப் போய்விடக் கூடாது என்று எண்ணுகின்ற நிலை இன்று நேற்றல்ல; நீண்ட று நெடுங்காலமாக இருந்து வருகின்ற பண்பு என்பதால், அதன் தொடர்பாக இந்த வட்டாரத்து நண்பர்கள் பெருமுயற்சியில் ஈடுபட்டு இந்த பொதுக்கூட்டத்தினை அடிப்படையாக வைத்து தங்களால் இயன்ற அளவு வசூல் செய்து மறைந்த நண்பர் வெங்கடேசன் குடும்பத்தாருக்கு, அவருடைய துணைவியாரிடத் தில் குழந்தைகள் புடைசூழ கண்ணீரும் கம்பலையுமாக இருக் கின்ற அந்தச்சகோதரியாரிடத்தில் ஏழாயிரத்து ஐநூறு ரூபாயை இன்றைக்கு நாம் வழங்கியிருக்கின்றோம். இது பெருந்தொகை அல்ல: என்றாலும், சிறுதொகைதான் என்றாலும் இதற்குப்பின்னால் இருக்கின்ற உணர்வுகள்தான் மிகப் ன் பெரியவை. கழகம் ஒரு குடும்பமாகத்தான் பாவிக்கப்பட்டு வருகின்றது இந்தக் குடும்பத்திலே யாருக்கு இன்னலென்றாலும் மற்றவர் கள் துடிப்பதும், எந்த இல்லத்திலே ஒரு மகிழ்ச்சி என்றாலும் அந்த மகிழ்ச்சியில் அனைவரும் திளைப்பதும் நம்முடைய வரலாறு! ஒரு அரசியல் இயக்கத்தைக் குடும்பப் பாசமுள்ள இயக்க மாக நடத்திக்காட்டிய பெருமை நம்மையெல்லாம் ஆளாக்கிய தலைவர் அண்ணா அவர்களுக்கு உண்டு! - தந்தை என்று பெரியாரையும்,அண்ணன் என்று பேரறிஞர் அண்ணாவையும் அழைத்து நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அண்ணன் - தம்பி என்ற உறவு கொண்டு ஒரு கட்சி - அதன் தலைவர் - பொதுச்செயலாளர்-தொண்டர்கள் என்பதெல்லாம் கழகசட்ட திட்டப் புத்தகத்தில் இருக்கின்ற ஒன்று என்றாலும் கூட அவைகளுக்கு அப்பாற்பட்ட நிலையிலே பாச உணர்ச்சி யோடு நாம் பழகிக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட பாச உணர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக இருப்பதுதான் இந்நிகழ்ச்சி என்றால் அது மிகையாகாது!