உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மிசா கால கொடுமைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166759 47 கிற்கும் கருணாநிதி கொலை செய்ய முயன்றார் என்ற வழக்கிற் கும் பிறகு - இப்படிப் பல்வேறு வழக்குகள் போட்டப்பட்ட பிறகு சிறைச்சாலையில் கழகத் தோழர்களை சித்ரவதை செய்த பிறகு - சிட்டிபாபு பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு வீரர்களை இழந்த,பிறகு நாம் மிரட்டப்பட்ட பிறகு -- தமிழக மக்களின் அச்சுறுத்தலுக்கு ஆளானப்பிறகு - அகில இந்திய வானொலி யைத் திறந்தால் காலையிலிருந்து மாலைவரைக்கு அர்ச்சனை நடை பெற்றுக் கொண்டிருந்ததே அதற்குப் பிறகு தமிழ் நாட்டு மக்கள் தி.மு. கழகத்திற்கு அளித்த வாக்குகள் 42 லட்சம் என்பதை மறந்து விடக்கூடாது - அங்கே பல கட்சிகள் சார்பில் எம். ஜி. ஆருக்கு கிடைத்த வாக்குகள் 52 லட்சம்! இங்கே ஒரே கட்சி தனித்து நின்று பெற்ற வாக்குகள் 42 லட்சம்! இடையில் இருக்கிற வித்தியாசம் பத்து லட்சம்தான். அடுத்த தேர்தலில் அது இந்தப்பக்கம் வந்தால் (பலத்த கையொலி) ஆகவே ஆளுங்கட்சி எதிர்கட்சியாவதும் எதிர் கட்சி ஆளுங்கட்சியாவதும் தவறுமல்ல; நடக்கக்கூடாததுமல்ல முடியாததுமல்ல; நடைபெற்றிருக்கிறது; தமிழ்நாட்டில் அதற்கு சான்றும் இருக்கிறது ஆனால் எதிர்க்கட்சியாகிவிட்ட காரணத்தாலேயே ஆளுங் கட்சியினுடைய தவறுகளை எடுத்துச்சொல்லவே கூடாது என்ற நிபந்தனையை யாராவது விதிப்பார்களேயானால், தவறுகளை எடுத்துச்சொல்கிற நேரத்தில் நீ செய்யவில்லையா? என்று கேட்டுக்கொண்டே இருப்பார்களானால் நான் அவர்களுக்கு சொல்கின்ற ஒரே பதில் நான் செய்தேன் குற்றம் என்று சொன்னால் மக்கள் எனக்கு தீர்ப்பளித்து எதிர்கட்சியில் உட்கார வைத்திருக்கிறார்கள். நான் செய்வதையே நீயும் செய்ய எதற் காக அங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாய்? இந்தக் கேள்வியை நான் கேட்பேன். -- விவசாயிகளின் போராட்டத்தில் எட்டுப்பேரைச்சுடலாமா?