உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மிசா கால கொடுமைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 என்று கேட்டால் 12 பேரை நீ சுட்டாய்; எனவே இன்னு நான் சுடவேண்டியது 4 பாக்கி இருக்கிறது என்று கேட்பதா? விவசாயிகளின் போரட்டத்தை தி, மு. கழக ஆட்சியில் நடத்தியது யார்? எல்லாக்கட்சிக்காரர்களும் சேர்ந்து நடத்தி னார்கள் ! இன்றைக்கு நடைபெற்ற விவசாயப் போராட்டத்தில் எந்தக் கட்சியின் பின்னணியுமில்லை. நடைபெற்று முடிந்த அடக்கு முறை, வன்முறைகள் பற்றி எதிர்க்கட்சிகள் தங்கள் குரலைக் கொடுத்தன, ஆனால் அன்றைக்கு தி மு கழக ஆட்சியிலே விவசாயிகள் போராட்டத்தை பல கட்சிகள் முன்னின்று நடத்தின. இல்லை என்று சொல்ல முடியுமா? பத்திரிகைச் செய்தி கிடையாதா? அந்த நேரத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது- நான் மறுக் கவில்லை. அந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது சரிதான் என்று நான்கூட அந்த அளவுக்கு நியாயம் பேசவில்லை-அப் போது கட்சியின் பொருளாளராக இருந்த எம். ஜி. ஆர். சுட்டது நியாயம்தான் என்று அன்றைக்கு மேடைக்கு மேடை பேசினார். மறந்துவிட முடியுமா? பத்திரிகைகளில் ஆதார மில்லையா? பஸ் தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதியம் போதவில்லை என்று கேட்கிறார்களா ? கருணாநிதிதான் காரணம் ! விவசாயிகள் தங்களின் வீடு, வாசல் தாங்கள் பட்டகடனுக் காக கடுமையான முறையில் ஜப்தி செய்யப்படுகின்றன நாங்கள் கைது செய்யப்படுகிறோம். இது நியாயமா என்று விவசாயிகள் கேட்கிறார்கள் - இதற்கும் கருணாநிதி தான் காரணம் ? - என்.ஜி ஓக்கள் -அரசு ஊழயர்கள் சம்பளம் போதவில்லை என்று கோரிக்கை விடுத்தாலும் கருணாநிதிதான் காரணம் என்று எதற்கெடுத்தாலும் தி. மு. கழகத்தின் மீதே பழிசொல் லிக்கொண்டிருக்கிறார் கிறார். 'கருணாநிதிக்கு சித்தபிர்மை வந்து விட்டது என்று பேசு - முதலமைச்சரே இப்படிப் பேசினால் எனக்குச் சித்தப் பிரமை பிடித்து விட்டது என்றால் எனக்குக் கோபம் வருவது பிறகு இருக்கட்டும் ருக்கட்டும் - கட்சியிலுள்ள கொள்கை வெறிபிடித்த தொண்டனுக்கு இதைக்கேட்கும்போது கோபம் வருமா வராதா?